27 ஆண்டுகளுக்கு பின் டயானா விருது அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது
வேல்ஸ் இளவரசி டயானாவின் நினைவாக நிறுவப்பட்ட டயானா விருது அறக்கட்டளை, 27 ஆண்டுகளுக்குப் பிறகு விருது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அந்த அறக்கட்டளை தனது பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்வதாகவும், அது அங்கீகரித்த இளைஞர்களின் சாதனைகள் இன்றும் முக்கியமானவை என்றும் வலியுறுத்தியுள்ளது.
அந்த அமைப்பால் இனி தனது கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீர்மானத்திற்கு வேல்ஸ் இளவரசர் வில்லியம், தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதுடன், பல ஆண்டுகளாக இளைஞர்களுக்கு அர்ப்பணிப்புடன் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.




