ஐரோப்பா

லண்டனில் ரயில் சேவை ஊழியர்கள் பணிப்புறக்கனிப்பு

லண்டனில்  ரயில் சேவை ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று 24 மணிநேர வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதனால் மில்லியன் கணக்கான பயணிகள் பயண தாமதத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குளிர் காலப் பகுதியில் 08 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் நாள் வேலைநிறுத்தம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம்  மாலை வரை தொடரும் இந்த  வேலைநிறுத்தத்தால், நகரத்தை ஹீத்ரோ விமான நிலையத்துடன் இணைக்கும் ஒரு முக்கிய வழித்தடம் உட்பட மூன்று வழித்தடங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

நான்கு நாள் வேலை வாரத்தைச் சுற்றியுள்ள பணி ஏற்பாடுகளுக்கான திட்டங்கள், ஓட்டுநர்களின் நிலைமைகளை மோசமாக்கும் என்றும், அவர்கள் நீண்ட நேரம் ரயில்களை இயக்க வேண்டியிருக்கும் என்றும் RMT தொழிற்சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வுக்கோரியே மேற்படி வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்