குவைத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் – இரு இத்தாலிய வீரர்கள் பலி
குவைத்தில் ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், வான் பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றி வந்த இரண்டு இத்தாலிய தொழில்நுட்ப வல்லுநர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இன்று இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
பல மாதங்களுக்குப் பிறகு வளைகுடா நாட்டில் நடந்த முதல் உயிரிழப்புத் தாக்குதல் இதுவாகும்.
சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான கட்டுப்பாட்டிற்காக தெஹ்ரானும் அமெரிக்காவும் தொடர்ந்து சண்டையிட்டு வரும் நிலையில், கடந்த வாரம் குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய இரு நாடுகள் மீதான தாக்குதல்களையும் ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் “இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில், ஈரானில் தயாரிக்கப்பட்ட பல ஆளில்லா விமானங்கள், குவைத்தை நோக்கி ஏவப்பட்டிருந்தன.
இதிலேயே குறித்த இரு வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களின் மரணத்திற்கு இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது எண்ணங்கள் உள்ளன,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தெஹ்ரான் மீது கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.




