ஐரோப்பா செய்தி

அரச குடும்ப சொத்துக்களை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டிய Andrew?

Prince Andrew அரசிற்குச் சொந்தமான தங்குமிடங்களை வாடகைக்கு வழங்கி வருமானம் ஈட்டியுள்ளார் என தெரியவந்துள்ளது.

பிரிட்டிஷ் மன்னர் குடும்பத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் Crown Estate அமைப்பிடமிருந்து குத்தகைக்கு எடுத்த ராயல் லாட்ஜ் எஸ்டேட்டில் உள்ள மூன்று வீடுகளே வாடகைக்கு விடப்பட்டு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் (NAO) அறிக்கையில்மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. எனினும்,வாடகைத் தொகை எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மேலும், மன்னர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வப் பணிகளில் ஈடுபடாத  ஆண்ட்ரூவின் மகள்களான Princess Eugenie மற்றும் Princess Beatrice ஆகியோரின் அரண்மனை தங்குமிடங்களுக்கான வாடகையை மன்னர் சார்லஸ் தனது சொந்தப் பணத்திலிருந்து செலுத்தி வருகிறார் என்பதையும் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் அரச குடும்பத்தின் தங்குமிடங்கள் குறித்து வெளிவந்துள்ள முதல் அறிக்கை இதுவாகும்.

இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் கருத்து வெளியிடுகையில், ” இந்த அறிக்கை அரச குடும்பத்தின் வெளிப்படைத்தன்மைக்கான அர்ப்பணிப்புக்கு இணங்க அமைந்துள்ளது.” என்று தெரிவித்தார்.

ஆண்ட்ரூ , ராயல் லாட்ஜ் குத்தகையை எடுத்தபோது அதன் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக £7.5 மில்லியன் (சுமார் 75 லட்சம் பவுண்டுகள்) செலுத்தியிருந்தார். அதன் காரணமாக அவர் மாதாந்திர வாடகை செலுத்த வேண்டியதில்லை.

தேசிய கணக்காய்வு அலுவலகம் (NAO) இந்த அறிக்கை, இளவரசி யூஜினிக்கு கென்சிங்டன் அரண்மனையிலும், இளவரசி பீட்ரைஸுக்கு செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையிலும் தங்குமிடங்கள் இருப்பதைக் காட்டுகிறது.

மத்திய லண்டனில் உள்ள இந்த தங்குமிடங்களுக்கு அவர்கள் எந்த வாடகையும் செலுத்துவதில்லை. அதற்கு பதிலாக, மன்னரின் தனிப்பட்ட பணமான “பிரிவி பர்ஸ்” (privy purse) மூலம் அரச குடும்பத்திற்கு இந்த வாடகை செலுத்தப்படுகிறது.

ஆனால், இந்த இரண்டு அரண்மனைகளும் பொதுமக்களின் வரிப்பணமான ‘சவரன் கிராண்ட்’ (Sovereign Grant) மூலமே பராமரிக்கப்படுகின்றன.

முன்னாள் உள்துறை அமைச்சரும், அரச குடும்பத்தின் நிதிச் செயல்பாடுகளை விமர்சிப்பவருமான நார்மன் பேக்கர் , “இத்தகைய சொகுசு தங்குமிடங்களுக்கு மானியம் வழங்குவது அதிர்ச்சியளிக்கிறது, பொதுமக்களின் பணம் வீண் விரயமாக்கப்படுகின்றது” என சாடியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!