அனோஜனின் விடுதலைக்காக ராஜதந்திர சமரில் களமிறங்கியது தமிழரசுக் கட்சி
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலைக்கான இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் கொழும்பிலுள்ள இந்திய மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு இணங்க, கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையில் சண்முகம் குகதாசன், மருத்துவர் சத்தியலிங்கம், கோடீஸ்வரன், சிறிநேசன், சிறிநாத் மற்றும் ரவிகரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் […]













