ஈரான் போரை நிபந்தனை இன்றி முடிவுக்கு கொண்டுவர பெரும்பாலான அமெரிக்கர்கள் ஆதரவு
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அமெரிக்க வாக்காளர்களில் பெரும்பான்மையானோர் விரும்புவதாக கருத்து கணிப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது.
கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 55 சதவீதமானோர் “நிபந்தனைகளைப் பொருட்படுத்தாமல், போரை இப்போதே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்ற கருத்துடன் உடன்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சுயேச்சையாளர்களிடையே இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் குடியரசுக் கட்சியினரில் சுமார் 25 சதவீதமானோர் இந்த கருத்துடன் உடன்பட்டுள்ளனர்.
போரை நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளையும் பெரும்பாலான ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள் ஆதரித்துள்ளனர்.
மேலும் கட்சி உறுப்பினர்களில் 53 சதவீதமானோர், இராணுவ நடவடிக்கைகளுக்கான நிதியை காங்கிரஸ் நிறுத்தி வைப்பதை ஆதரிப்பதாகவும், 51 சதவீதமானோர், இந்த நடவடிக்கை அரசாங்க முடக்கத்திற்கு வழிவகுத்தாலும், வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டப் பேச்சுவார்த்தைகளில் “ஈரான் போருக்கான நிதி நிறுத்தத்தை” ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆக மொத்தத்தில் “மக்கள் இந்தப் போரை கடுமையாக எதிர்ப்பதையும், அது முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவதையும் இந்த கருத்து கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.




