இலங்கை செய்தி

அனோஜனின் விடுதலைக்காக ராஜதந்திர சமரில் களமிறங்கியது தமிழரசுக் கட்சி

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலைக்கான இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் கொழும்பிலுள்ள இந்திய மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலைக்கான இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் கொழும்பிலுள்ள இந்திய மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு இணங்க, கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையில் சண்முகம் குகதாசன், மருத்துவர் சத்தியலிங்கம், கோடீஸ்வரன், சிறிநேசன், சிறிநாத் மற்றும் ரவிகரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சந்திப்புகளில் கலந்துகொண்டனர்.

இதற்கமைய, நேற்றுப் புதன்கிழமை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் அன்ரனி வி. பிரினோட் ஆகியோரைத் தனித்தனியாகச் அவர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

அனோஜனின் விடுதலைக்காக  ராஜதந்திர சமரில் களமிறங்கியது தமிழரசுக் கட்சி

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசர தேவைகள் குறித்தும், அவரை மீட்கும் விவகாரத்தில் தூதரக ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

சம்பந்தப்பட்ட அனைத்துலகத் தரப்புகளுடனும் ஒருங்கிணைந்து உரிய இராஜதந்திர அழுத்தங்களையும் முயற்சிகளையும் முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை