போதைப்பொருள் கடத்தப்பட்ட சொகுசு கார் மீட்பு: தப்பியோடிய கும்பலுக்கு வலை
திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பவெவ காட்டுப்பகுதியில் சொகுசு கார் ஒன்றை நிறுத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்ய மொரவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. திருகோணமலைப் பகுதியில் இருந்து சொகுசு கார் ஒன்றில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு, குறித்த சொகுசு காரை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர். எனினும், பொலிஸாரின் […]













