அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம்: சட்ட சமருக்கு தயாராகும் சஜித் அணி

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களைக் கோரும், 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகிறது.

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களைக் கோரும், 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகிறது.

அரசியலமைப்புத் திருத்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தை தங்கள் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருவதாகக் கூறினார்.

பொதுமக்களின் எதிர்ப்பைத் திரட்டுவதற்கும், அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் தங்கள் கட்சி அரசியல் பிரசாரங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி சட்டவாளர் சங்கத்துடன் கலந்துரையாடியுள்ளோம். அடுத்ததாக என்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை மதிப்பிடுவதற்கு எங்கள் சட்டவாளர்களுடன் நாங்கள் தொடர்ந்து கலந்தாலோசித்து வருகிறோம் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை