இலங்கை செய்தி

பொலிஸ்மா அதிபரை மிரட்டிய மஹிந்தவின் சகா கைது

பொலிஸ்மா அதிபரை மிரட்டிய மஹிந்தவின் சகா கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று (10) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் முன்னெடுக்க்பபட்டுவந்த விசாரணை தொடர்பிலேயே அவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுக்கு அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின்னர் கைது இடம்பெற்றுள்ளது.

முன்னதாகச் செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சாகர காரியவசம்,

“அரசாங்கத்திற்குச் சேவை செய்வதைத் தவிர்த்து, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நேர்மையாகச் சேவையாற்றுமாறு தற்போதைய காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இலங்கையின் 37ஆவது காவல்துறை மா அதிபர், நடுவீதியில் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார் என வரலாற்றில் பதிவாவதை நாம் விரும்பவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, தான் வெளியிட்ட கருத்து தவறாகத் திரிபுபடுத்திக் காண்பிக்கப்பட்டுள்ளதாகச் சாகர காரியவசம் விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை