இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முதலிடம்: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில்தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில்தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் வழங்கும் வகையிலான தனித் தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்து முன்மொழிந்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3-வது இடம் என்பது அவமானம் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடப்பட வேண்டும் என்பதைச் சட்டமாக்க வேண்டும் என்றும் திமுக வரவேற்பு தெரிவித்தது.

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பது தமிழர்களின் உணர்வு மற்றும் தமிழன்னைக்கான மரியாதை எனத் தெரிவித்து அதிமுக இத்தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது.

முதலமைச்சர் விஜய் தமிழின் மகன் என்றும், 8.5 கோடி தமிழர்களும் முதலமைச்சரின் இத்தீர்மானத்தை ஏற்கின்றனர் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்துள்ளதாக விசிக (வன்னி அரசு) வரவேற்பு அளித்ததோடு, பாமக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன.

எதிர்ப்புகள் ஏதுமின்றி, மறுப்போரே இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த இத்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி