22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்போம்: பீரிஸ் சபதம்
“அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தோற்கடிப்பதற்கு ஜனநாயக வழியில் முன்னெடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் கூட்டு எதிரணி மேற்கொள்ளும்” என்று சட்டத்துறை பேராசிரியரும் முன்னாள் அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மிகவும் ஆபத்தானது. அது பாரிய பாதக விளைவுகளையே ஏற்படுத்தும். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது மட்டுமல்லாமல், இது ஏனைய […]













