தங்கம் வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை
அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் உள்ள யுஜீன் (Eugene, Oregon) நகரில் நடைபெற்ற உலக தடகள U20 சாம்பியன்ஷிப் போட்டியில் (World Athletics U20 Championships), ஆஸ்திரேலியாவின் 19 வயதான உயரம் தாண்டுதல் வீராங்கனை ஐசோபெல் லூயிசன்-ரோ (Izobelle Louison-Roe) தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இப்போட்டியில் 1.92 மீட்டர் உயரத்தைத் தாண்டி முதலிடம் பிடித்த அவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
முன்னதாக 2024 லிமா சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த இவர், தற்போது தங்கம் வென்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.
ஹங்கேரியின் லிலியானா படோரி (Lilianna Bátori) வெள்ளியும், ஸ்பெயினின் எய்டானா அலோன்சோ (Aitana Alonso) வெண்கலமும் வென்றனர்.




