செய்தி விளையாட்டு

“நான் தான் சிறந்த வீரர்”: மார்தட்டுகிறார் Mbappe

ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர முன்கள வீரரான கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe), இந்த ஆண்டு தனது முதல் ‘பாலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்வதற்கு நல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

27 வயதான எம்பாப்பே, கடந்த பருவத்தில் தனது கழகத்திற்காக விளையாடிய 44 போட்டிகளில் 42 கோல்களை அடித்த போதிலும், ரியல் மாட்ரிட் அணி எந்தவொரு கிண்ணத்தையும் வெல்லவில்லை.

இருப்பினும், உலகக் கோப்பையில் 10 கோல்களை அடித்து ‘தங்கப் காலணி’ (Golden Boot) விருதை வென்ற அவர், உலகக் கோப்பை தொடர்களில் தனது ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கையை 22 ஆக உயர்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தார்.

எனினும் பிரான்ஸ் அணி இத் தொடரில் நான்காம் இடத்தையே பிடித்தது.

இது குறித்துப் பேசிய எம்பாப்பே, “உலகின் சிறந்த கழகமான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் போது, மக்கள் இயல்பாகவே உங்களை இந்த விருதுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பார்கள்.

என்னைப்பற்றியும் பாலோன் டி ஓர் விருது பற்றியும் பலர் பேசி வருகின்றனர். மிக முக்கியமான உலகக் கோப்பை தொடரில் நான் புதிய வரலாறு படைத்துள்ளேன்.

எனவே, இவ்விருதை வெல்வதற்கு இது ஒரு நல்ல ஆண்டாக இருக்கலாம்; ஆனால் வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் எப்போதுமே என்னை உலகின் சிறந்த வீரராகவே கருதுகிறேன். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். இது குறித்து நாம் விவாதிக்க வேண்டியதில்லை.

நிச்சயமாக இந்த ஆண்டு எனக்குச் சாதகமாக அமையலாம், ஆனால் பத்திரிகையாளர்களே வெற்றியாளரைத் தீர்மானிக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.

அக்டோபர் 26 ஆம் திகதி வழங்கப்படவுள்ள பாலோன் டி ஓர் விருதுக்கான போட்டியில், எம்பாப்பேயை விட மூன்று வீரர்கள் முன்னணியில் உள்ளதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பாயர்ன் முனிச் அணிக்காக 51 போட்டிகளில் 61 கோல்களைக் குவித்து இரட்டைப் பட்டங்களை வெல்ல உதவியதுடன், உலகக் கோப்பையிலும் 6 கோல்களை அடித்த இங்கிலாந்து அணியின் தலைவர் ஹாரி கேன் (Harry Kane) முதன்மைப் போட்டியாளராக உள்ளார்.

பார்சிலோனா அணிக்காக லா லிகா கிண்ணத்தையும், ஸ்பெயின் அணிக்காக உலகக் கோப்பையையும் வென்ற லம்னே யமால் (Lamine Yamal) இரண்டாமிடத்திலும், அவரது சக வீரரான ரோட்ரி (Rodri) மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி