ஐரோப்பா

நேபாளத்தை போலவே ஐரோப்பாவிற்கும் ஆபத்து – நிபுணர்கள் எச்சரிக்கை

  • August 29, 2026
  • 0 Comments

காலநிலை மாற்றத்தால், ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையானது பனிப்பாறைகளை வெகுவாக உருக வைக்கும் எனவும், கடல் நீர்மட்டம் உயர்ந்து பாரிய அனர்த்தம் ஏற்படும் எனவும் ஆய்வாளர்கள் முன்னதாக எச்சரித்திருந்தனர். இதற்கிடையே அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, பனிப்பாறை உருகியதால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது ஆல்ப்ஸ் மலைகளுக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். துருவ மற்றும் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிரேமன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பனிப்பாறை […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் தங்க நகைகளுக்கு குறி – ஆன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு செய்யும் கள்வர்கள்

  • August 24, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் கலைப் பொருட்கள் மற்றும் தங்க நகைகளை திருடும் கள்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபகாலங்களில் பெரும்பாலான இடங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்செயல்களுக்காக திருடர்கள் ஆன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் நடந்த கொள்ளை, இந்த மாற்றங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று யூரோபோல் கூறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கலைப்பொருள் திருடர்கள் அதிக லாபம் தரும் விலைமதிப்புள்ள […]

ஐரோப்பா செய்தி

காட்டுத்தீயால் திணறும் ஐரோப்பா – 80,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவு சேதம்

  • July 27, 2026
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும் பிரான்சில் அதிகரித்து வரும் காட்டுத்தீயின் தீவிரத்திற்கு ஈடுகொடுக்க ஐரோப்பாவின் தீயணைப்புத் திறன் போராடி வருவதாகவும், தீயானது உள்ளூர் வளங்களை தொடர்ந்து திணறடித்து வருவதாகவும் ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் ஏற்கனவே 80,000 ஹெக்டேருக்கும் அதிகமாகவும், பிரான்சில் 42,000 ஹெக்டேருக்கும் அதிகமாகவும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்நிலையில் இந்தத் தீ விபத்துகள் கட்டுப்படுத்தும் திறனை மீறிவிட்டன,” என்று ஒரு ஆணைய அதிகாரி இன்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்த நெருக்கடியானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் பாதுகாப்பு அமைப்பு […]

உலகம்

ஐரோப்பாவிற்கு கடத்தப்பட இருந்த 317 மில்லியன் டொலர் மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்

  • July 24, 2026
  • 0 Comments

ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்த சுமார் 317 மில்லியன் டொலர் மதிப்புடைய கொக்கைன் போதைப் பொருட்களை லைபீரிய அதிகாரிகள்  பறிமுதல் செய்துள்ளனர். இது லைபீரியாவின் வரலாற்றில் பதிவான மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்று எனவும் அதிகாரிகள் விவரித்துள்ளனர். தலைநகர் மன்ரோவியாவிற்கு (Monrovia) கிழக்கே உள்ள டுவாசோன் (Duazon)  நகரில் 3,971 கிலோ கொக்கைகன் போதைப் பொருட்களை கைப்பற்றியதோடு, அவற்றை ஐரோப்பாவிற்கு கடத்த முயன்ற இரு சந்தேகநபர்களையும் கைது செய்தனர். ஸ்பெயின் மற்றும் கொலம்பியா ஆகிய இரு நாடுகளின் கடவுச்சீட்டுகளையும் […]

உலகம்

ஐரோப்பா நோக்கிய ஆபத்தான பயணங்கள் அதிகரிப்பு -144 அகதிகள் மாயமானதாக அறிவிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவின் அட்லாண்டிக் தீவுகளுக்குச் செல்லும் பாதையில், மௌரித்தானியாவின் (Mauritania)  கடற்கரைக்கு அப்பால் தொடர்ச்சியாக கப்பல்கள் அல்லது படகுகள் விபத்துக்குள்ளாகுவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 144 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இறந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமை (UNHCR), ஜூலை 14 முதல் 18 வரையான காலப்பகுதியில் இந்த விபத்துகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த காலப்பகுதியில் மூன்று மீட்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் ஊடாக 387 பேர் […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் கடும் வெப்பம் – 1300 பேர் உயிரிழப்பு

  • June 29, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே வெப்ப அலை உலுக்கி வருகிறது. இந்நிலையில் இந்த வெப்ப அலை காரணமாக இதுவரை 1300 பேர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவொன்றில், “ஐரோப்பாவில் நிலவிய அதிக வெப்பநிலையுடன் தொடர்புடைய” 1,300-க்கும் மேற்பட்ட கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறினார். “வெப்ப அழுத்தம் பெரும்பாலும் ‘மௌனக் கொலையாளி’ என்று அழைக்கப்படுகிறது – மேலும் ஐரோப்பிய வீடுகள், […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலை – 41 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும்

  • June 20, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின் பெரும்பகுதி முழுவதும் பரவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அவசரக்கால நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு அவசரக்கால கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன், நாடு முழுவதும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் வெப்பநிலை சாதனை அளவை நோக்கி உயர்ந்ததால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 2003 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும் வெப்ப நிகழ்வுகளுக்கு ஒப்பாக, இந்த வெப்பம் அடுத்த வாரம் வரை நீடிக்கும் என்று தேசிய […]

ஐரோப்பா

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்!

  • May 31, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின் மிகப்பெரியதும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளதுமான ஸபோரிஷியா (Zaporizhzhia ) அணுமின் நிலையம் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலால் முக்கிய உபகரணங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என ரஷ்ய தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய படைகள் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி தாக்குதல்களை முன்னெடுத்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலை திட்டமிட்ட சதி என ரோசாட்டமின் (Rosatom) தலைவர் அலெக்ஸி லிகாச்சேவ்  ( Alexei Likhachev) தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த தாக்குதலை தங்கள் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடி- பயணிகளை ஒரே விமானத்தில் இணைக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி

  • May 3, 2026
  • 0 Comments

இந்த கோடை காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதால், ஒரே இடத்திற்குச் செல்லும் பல விமான சேவைகளில் உள்ள பயணிகளை ஒன்றாக இணைத்து குறைவான விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு பிரித்தானிய அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. ஒரே நாளில் ஒரே இலக்கை நோக்கி செல்லும் பல சேவைகள் உள்ள வழித்தடங்களில்,பயணிகளின்றி செல்லும் விமானங்களை குறைத்து எரிபொருள் சேமிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதற்கமைய சில பயணிகள் தங்களின் முன்பதிவு செய்யப்பட்ட […]

ஐரோப்பா

தற்காப்புத் திறன் – ஐரோப்பா தனது சொந்த பாதுகாப்பை மேம்படுத்துவதே சிறந்தது!

  • April 27, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின் தற்காப்புத் திறனுக்காக இம்மானுவேல் மக்ரோன் குரல் எழுப்பியுள்ளார். கிரீஸில் சமகால அரசியல் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தில் பொறிக்கப்பட்டுள்ள பரஸ்பர உதவிப் பிரிவு தெளிவானது என்றும், அது “வெறும் வார்த்தைகள் அல்ல” என்றும் அவர் கூறினார். பிரிவு – 42, பந்தி – 07 ஐப் பொறுத்தவரை அது தெளிவாக உள்ளது என்றும், அதற்கு விளக்கம் அளிப்பதற்கோ அல்லது தெளிவின்மைக்கோ இடமில்லை […]