ஐரோப்பா முழுவதும் நாசாவேலைகளை செய்யும் ரஷ்யா – எஸ்டோனியா வெளிப்படுத்திய உண்மை
மில்ரெம் ரோபோடிக்ஸ் Milrem Robotics என்ற பாதுகாப்பு நிறுவனத்தின் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ நாடான எஸ்டோனியா நடத்திய விசாரணையில்,மேற்படி முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா முழுவதும் ரஷ்யா மேற்கொள்ளும் பரந்த நாசவேலை முயற்சிகளுடன் இந்தச் சம்பவம் ஒத்துப்போகிறது என்பதற்கான ஆதாரங்களை பாதுகாப்பு சேவைகள் திரட்டியுள்ளதாக எஸ்டோனியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து, பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட நேட்டோ நட்பு நாடுகள் எஸ்டோனியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், எரிசக்தி ஏற்றுமதி மற்றும் வழித்தடங்கள் தொடர்பான தரவுகளை ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் வெளியிடுவதைத் தடுக்கும் ஒரு ஆணையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.




