உலகம்

ஐரோப்பா நோக்கிய ஆபத்தான பயணங்கள் அதிகரிப்பு -144 அகதிகள் மாயமானதாக அறிவிப்பு

மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவின் அட்லாண்டிக் தீவுகளுக்குச் செல்லும் பாதையில், மௌரித்தானியாவின் (Mauritania)  கடற்கரைக்கு அப்பால் தொடர்ச்சியாக கப்பல்கள் அல்லது படகுகள் விபத்துக்குள்ளாகுவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறைந்தது 144 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இறந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமை (UNHCR), ஜூலை 14 முதல் 18 வரையான காலப்பகுதியில் இந்த விபத்துகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் மூன்று மீட்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் ஊடாக 387 பேர் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் அவ் முகமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமை (UNHCR) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், “மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவை நோக்கி ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ள முயன்ற அகதிகளும் புலம்பெயர்ந்தோரும் இறந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ அறிவிக்கப்பட்டனர். இது இந்த அபாயகரமான பாதைகளின் தொடர்ச்சியான மனித இழப்புகளை எடுத்துக்காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்