நேபாளத்தை போலவே ஐரோப்பாவிற்கும் ஆபத்து – நிபுணர்கள் எச்சரிக்கை
காலநிலை மாற்றத்தால், ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்நிலையானது பனிப்பாறைகளை வெகுவாக உருக வைக்கும் எனவும், கடல் நீர்மட்டம் உயர்ந்து பாரிய அனர்த்தம் ஏற்படும் எனவும் ஆய்வாளர்கள் முன்னதாக எச்சரித்திருந்தனர்.
இதற்கிடையே அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, பனிப்பாறை உருகியதால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இது ஆல்ப்ஸ் மலைகளுக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
துருவ மற்றும் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிரேமன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பனிப்பாறை ஆய்வாளருமான ஓலாஃப் ஐசன் Olaf Eisen, இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
உதாரணமாக, 2025 மே மாதம் சுவிட்சர்லாந்தின் பிளாட்டன் கிராமத்தில் பாறை மற்றும் பனியாறு சரிவு ஏற்பட்ட சம்பவத்தை ஐசன் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் “தற்போதைய மதிப்பீடுகளின்படி, பனிச்சரிவின் அளவைப் பொறுத்தவரை, நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு பிளாட்டனில் ஏற்பட்டதை விட சுமார் 10 முதல் 20 மடங்கு பெரியது,” என்றும் ஐசன் வரையறுத்துள்ளார்.
இதற்கிடையே 1850-ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் சுமார் 1,000 பனியாறுகள் மறைந்துவிட்டன. மொத்தத்தில், சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதன் பனிப் போர்வையை இழந்துள்ளது என்று SRF தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




