உலகம்

கச்சா எண்ணெய் விலை 2 சதவீதத்தினால் உயர்வு

  • September 14, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் கச்சா எண்ணெய் விலைகள், 02 சதவீதம் உயர்ந்துள்ளன. இதற்கமைய பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 2.90 டொலராக உயர்ந்து    107.51 டொலராக பதிவாகியுள்ளது. அதேபோல்  WTI கச்சா எண்ணெய்  பீப்பாய்க்கு 2.27 டொலர் உயர்ந்து 102.32 டொலராக பதிவாகியுள்ளது. சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் பாதை மூடப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த விநியோகக் கவலைகள் மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் புதிய தாக்குதல்கள் மற்றும் வளைகுடாப் பகுதியில் கப்பல்கள் […]

உலகம்

கிரீன்லாந்தில் கச்சா எண்ணெய் ஆய்வை நடத்த அமெரிக்க நிறுவனம் முயற்சி

  • August 11, 2026
  • 0 Comments

முறையான அனுமதி இல்லாமல் துளையிடும் கருவிகளைக் கரைக்குக் கொண்டு சென்றதற்காக, டெக்சாஸை தளமாகக் கொண்ட கிரீன்லாந்து எனர்ஜி நிறுவனத்திற்கு கிரீன்லாந்து அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜேம்சன் லேண்ட் படுகையில் 1 டிரில்லியன் டொலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் இருப்பதாக நம்பும் கிரீன்லாந்து எனர்ஜி, அங்கு ஆய்வுத் துளையிடுதலுக்காக 60 மில்லியன் டொலர் முதலீடு செய்ய இலக்கு வைத்துள்ளது. அந்நிறுவனத்தின் முந்தைய  அனுமதி காலாவதியாகிவிட்டதை பிராந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும் எதிர்கால தளவாடங்கள் அனைத்திற்கும் முன் அனுமதி […]

உலகம் முக்கிய செய்திகள்

100 டொலரை எட்டியது கச்சா எண்ணெய் விலை

  • July 23, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல், உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த அச்சங்களை மீண்டும் தூண்டியதால், மே மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டொலரை எட்டியுள்ளது. அமெரிக்கா ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதால், பல நாட்களாக அதிகரித்து வந்த எண்ணெய் விலையானது இன்றைய தினம் உச்சத்தை தொட்டுள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் 05 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. செங்கடலில் ஹூதி போராளிகள் எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதைத் தொடர்ந்தே […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் 100 டொலரை எட்டும் கச்சா எண்ணெய் விலை!

  • July 23, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் இராணுவப் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலக சந்தையின் முக்கிய எண்ணெய் குறியீடான பிரென்ட் கச்சா எண்ணெயின் ஒரு பேரலின் விலை, 98 அமெரிக்க டாலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆறு வாரங்களில் பதிவான மிக உயர்ந்த விலை மதிப்பாகும். WTI ஒரு பேரலின் விலையும் 90 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இதற்கிடையில், கச்சா […]

உலகம்

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்

  • July 19, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு அமைய  ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.10 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.49 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலை 2.91 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

போர் பதற்றம் – கச்சா எண்ணையின் விலை 03% அதிகரிப்பு

  • July 13, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் அதிகரித்துவரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெயின் விலை 03 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஈரானின் 90 இலக்குகளை தாக்கி அழித்துள்ள நிலையில், பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்காரணமாக கச்சா எண்ணெயின் விலை 3.08 சதவீதம் உயர்ந்து 78.35 டொலராக பதிவாகியுள்ளது. தே நேரத்தில் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 2.21 டொலர் (3.09%) உயர்ந்து $73.62  டொலராக பதிவாகியுள்ளது. இதற்கிடையே […]

உலகம்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் – கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

  • July 8, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 03 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரத்தின்படி    ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 2.27 சதவீதம் அதிகரித்து, US$72.04 ஆக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 2.18 சதவீதம் அதிகரித்து, US$75.78 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பேரல் முர்பான் கச்சா எண்ணெயின் விலை 3.43 சதவீதம் அதிகரித்து, […]

உலகம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • June 25, 2026
  • 0 Comments

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை இன்று (25) 70 அமெரிக்க டொலர் என்ற அளவை நெருங்கியுள்ளது. அதன்படி, இன்று ஒரு பேரல் WTI எரிபொருளின் விலை 70.05 அமெரிக்க டொலராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 73.32 அமெரிக்க டொலராகக் குறிப்பிடப்பட்டது. இதற்கிடையில், ஒரு பேரல் முர்பான் கச்சா எண்ணெயின் விலை 4.57% குறைந்து 66.45 அமெரிக்க டொலராக உள்ளது. மத்திய கிழக்கில் போர் தொடங்கியபோது, ​​உலக […]

உலகம்

கச்சா எண்ணெயின் விலை 300 டொலருக்கு சென்றிருக்க வேண்டும்!! மக்களை சமாளிக்கும் ட்ரம்ப்!

  • June 7, 2026
  • 0 Comments

இந்த கிரகத்திலேயே அதிக கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு அமெரிக்காவிடம்தான் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றங்களால் அமெரிக்காவில் எரிபொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இது மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,  அமெரிக்காவிற்கு யாருக்கும் தெரியாத பல ரகசிய வழிகளில் இருந்து எண்ணெய் வந்து கொண்டிருக்கிறது என்றும், அவற்றில் சிலவற்றைத் தான் வெளியில் பகிரங்கமாகச் சொல்ல […]

உலகம்

உலக  சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

  • June 3, 2026
  • 0 Comments

உலக  சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று கணிசமாக உயர்ந்துள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 1.24 சதவீதம் அதிகரித்து, 94.92 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 1.08 சதவீதம் அதிகரித்து, 97.04 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு பேரல் முர்பான் கச்சா எண்ணெயின் விலை 1.76 சதவீதம் அதிகரித்து, 96.09 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.