உலகம்

கச்சா எண்ணெயின் விலை 300 டொலருக்கு சென்றிருக்க வேண்டும்!! மக்களை சமாளிக்கும் ட்ரம்ப்!

இந்த கிரகத்திலேயே அதிக கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு அமெரிக்காவிடம்தான் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றங்களால் அமெரிக்காவில் எரிபொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இது மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,  அமெரிக்காவிற்கு யாருக்கும் தெரியாத பல ரகசிய வழிகளில் இருந்து எண்ணெய் வந்து கொண்டிருக்கிறது என்றும், அவற்றில் சிலவற்றைத் தான் வெளியில் பகிரங்கமாகச் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 300 டொலருக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவின் உத்திகளால் அது தற்போது 96 டொலர் என்ற அளவிலேயே  வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவி வரும் அனைத்துப் பிரச்சினைகளும் சுமுகமாக முடிவுக்கு வந்த பின்னர், கச்சா எண்ணெயின் விலை முன்பு இருந்ததை விட இன்னும் அதிகமாகக் குறையும் என்பதால் மக்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று அவர்  உறுதியளித்துள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்