சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

சிறைச்சாலை கட்டமைப்பில் சீர்திருத்தம்: துறைசார் அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஆலோசனை

  • July 20, 2026
  • 0 Comments

சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக அவர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், சிறைச்சாலை வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அதற்காக எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்தும் […]

இஸ்ரேலிய ராணுவத்தால் கடந்த 2024 அக்டோபர் மாதம் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் (Yahya Sinwar) பதிலாக, ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா (Khalil al-Hayya) நியமிக்கப்பட்டுள்ளார். உலகம் செய்தி

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக halil al-Hayya நியமனம்

  • July 20, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய ராணுவத்தால் கடந்த 2024 அக்டோபர் மாதம் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் (Yahya Sinwar) பதிலாக, ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா (Khalil al-Hayya) நியமிக்கப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவராகவும், அதன் தலைமைச் சபையின் ஐந்து உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்த அல்-ஹய்யா, தேர்தலில் (run-off ballot) வெற்றி பெற்றுத் தலைவராகத் தேர்வாகியுள்ளார் என்று ஹமாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் ஹமாஸின் உயர்மட்டத் தலைவர்களான சின்வார், காசாவின் ராணுவத் […]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹுயை (Choe Son Hui) ஞாயிற்றுக்கிழமை கிரெம்ளினில் (Kremlin) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உலகம் செய்தி

உக்ரைன் போரில் உதவி: வடகொரியாவுக்கு ரஷ்ய ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

  • July 20, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹுயை (Choe Son Hui) ஞாயிற்றுக்கிழமை கிரெம்ளினில் (Kremlin) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, ரஷ்யா மேற்கொள்ளும் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு’ வடகொரியா அளித்து வரும் உதவிகளுக்காக அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகக் கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில், ரஷ்யாவின் மேற்குப் பகுதியான குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்திற்குள் உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ஊடுருவலை முறியடிக்க வடகொரியப் படைகள் ரஷ்யாவிற்கு உதவின. இரு […]

குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கை செய்தி

குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா குறித்து விசாரணைகள் ஆரம்பம்

  • July 20, 2026
  • 0 Comments

குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை எதிர்வரும் 25ம் திகதி வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்பாட்டு குழுவின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சதீஸ் வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறை கலவரத்தின் போது குட்டிமணி […]

Faishal Ibrahim resigns உலகம் செய்தி

பெண்ணுடன் தொடர்பு – சிங்கப்பூர் அமைச்சர் ராஜினாமா

  • July 20, 2026
  • 0 Comments

பெண்ணொருவருடனான தொடர்புகள் காரணமாக, சிங்கப்பூரின் முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் பைஷல் இப்ராஹிம் (Faishal Ibrahim) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) தெரிவித்துள்ளார். “அவர்களது பெரும்பாலான தொடர்புகள் இணையவழிச் செய்திகள் மூலமாகவே நடந்துள்ளன,பொதுநிகழ்ச்சிகளின் இடைவேளைகளிலும் அவர்கள் சந்தித்துக்கொண்டனர். ” என்று திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வோங் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துன்புறுத்தல் (Harassment) குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளதாகவும், இது குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் […]

ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவிற்குப் பயணம் செய்து, அந்த அமைப்பில் உறுப்பினராக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்திரேலியப் பெண் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஐஎஸ் பயங்கரவாத வழக்கு: ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு பிணை

  • July 20, 2026
  • 0 Comments

ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவிற்குப் பயணம் செய்து, அந்த அமைப்பில் உறுப்பினராக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்திரேலியப் பெண் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. நான்கு குழந்தைகளின் தாயான ரயான் எல் ஹூலி (Rayann El Houli) என்பவர், தடைசெய்யப்பட்ட மோதல் பகுதிக்கு பயணம் செய்ததாகவும், ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாகவும் கடந்த மே மாதம் குற்றம் சாட்டப்பட்டார். 34 வயதான இவரது பிணை மனுவை மெல்போர்ன் நீதிபதி பிரெட் சோனட் திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டார். குற்றச்சாட்டுகளின் […]

இந்தியா செய்தி

கரப்பான்பூச்சி ஜனநாயக் கட்சியினரைக் கலைக்க தடியடி

  • July 20, 2026
  • 0 Comments

இந்திய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை தடியடி நடத்தியது. நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நாடாளு​மன்​றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இன்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை லேசான […]

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிப்பு

  • July 20, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜுலை மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு நாளை 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. எனவே, 21 ஆம் திகதி கையளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவ்வாரத்துக்குள் நிச்சயம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். நீர் கொழும்பு சிறைச்சாலை கலவரத்தை மையப்படுத்தியே இப்பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அவசர விடயமாக கருதி இதனை […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கும் மர்ம மரணங்களின் பின்னணியில் ராஜபக்சக்கள்?

  • July 20, 2026
  • 0 Comments

நாட்டில் யாராவது தற்கொலை செய்துகொண்டால் கூட, அது ராஜபக்சக்களின் வேலையாக இருக்கலாம் என விமர்சிக்கும் அளவுக்கு தற்போதைய நிலைமை மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “கொழும்பு துறைமுக நகரம், தாமரை கோபுரம், நெடுஞ்சாலைகள் போன்ற பாரிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிர்மாணித்தது யார் அல்லது முப்பதாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு […]

2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற சாம்பியன் பட்டத்திற்கான கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மற்றும் FIFA தலைவர் ஜியானி இன் பான்டினோ ஆகியோர் மைதானத்திற்குள் வந்தபோது, அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். செய்தி விளையாட்டு

ட்ரம்ப், FIFA தலைவருக்கு எதிராக மைதானத்தில் கூச்சல்

  • July 20, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற சாம்பியன் பட்டத்திற்கான கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மற்றும் FIFA தலைவர் ஜியானி இன் பான்டினோ ஆகியோர் மைதானத்திற்குள் வந்தபோது, அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ஹெலிகாப்டர் மூலம் மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி டிரம்ப் மற்றும் FIFA தலைவர் இன்ஃபான்டினோ ஆகியோர், சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி வீரர்கள் […]