ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரெஞ்சு மொழி மையத்திற்கு ஈரானில் பூட்டு: பிரான்ஸ் கடும் எதிர்ப்பு 

தெஹ்ரானில் உள்ள பிரான்ஸ்  தூதரகத்துடன் இணைக்கப்பட்ட பிரெஞ்சு மொழி கற்பிக்கும் மையத்திற்கு ஈரானிய அதிகாரிகள் பூட்டு போட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸிற்கான ஈரானிய தூதுவருக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பு அனுப்பப்படும் என்றும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரான்ஸ்   வெளியுறவு அமைச்சு  தெரிவித்துள்ளது.  
தெஹ்ரானில் உள்ள பிரான்ஸ்  தூதரகத்துடன் இணைக்கப்பட்ட பிரெஞ்சு மொழி கற்பிக்கும் மையத்திற்கு ஈரானிய அதிகாரிகள் பூட்டு போட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸிற்கான ஈரானிய தூதுவருக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பு அனுப்பப்படும் என்றும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரான்ஸ்   வெளியுறவு அமைச்சு  தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்  Pascal Confavreux வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் தூதரகத்தின் இரு ஊழியர்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானில் பிரான்ஸின் கலாச்சார அமைப்பின் மீது நடத்தப்பட்டுள்ள இந்த புதிய தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது; நியாயப்படுத்த முடியாதது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிரான்ஸ் குடிமக்கள் சிலரை தெஹ்ரான் சிறைபிடித்தது போன்ற விவகாரங்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும், ஈரான் மீதான அமெரிக்கப் போரிலிருந்து பாரிஸ் விலகி இருந்த பிறகும் உறவு ஓரளவு சீரடைந்தது.
இருப்பினும், கடந்த கோடை காலத்தில் இரண்டு பிரான்ஸ் ராஜதந்திரிகள் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான நிலைமை மீண்டும் மோசமடைந்தது. இதற்குப் பதிலடியாக பிரான்ஸும் ஈரானிய ராஜதந்திரிகளை வெளியேற்றியது.
இந்நிலையிலேயே தற்போது மேலுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி