ஈரான் ஜனாதிபதியை சந்திக்க தயாராக இருக்கின்றேன் – ட்ரம்ப்
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஆறு மாதங்களுக்கும் மேலாகத் நீடித்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
ஈரான் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும், இல்லையெனில் பொருளாதார ரீதியாக அழிவைச் சந்திக்க வேண்டும் அல்லது ஆட்சி அதிகாரத்திலிருந்து அழிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அதே நேரத்தில், அமெரிக்காவின் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும் பழிவாங்கும் வகையில் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய ராணுவம் எச்சரித்துள்ளது.
இந்த மோதல் பல மாதங்களாக எந்த முடிவும் இன்றி முடங்கியுள்ளது. இரு தரப்பும் விட்டுக்கொடுக்கத் தயார் இல்லாததால், உலகளவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், ஈரானின் பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சியடைந்து பிராந்திய அளவிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
Fox News செய்தியாளருடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப், ஈரான் தலைவர்கள் ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும், இல்லையெனில் பொருளாதார ரீதியாகச் சீரழிய வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இருப்பினும், இந்த வாரம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுவதால், அவரைச் சந்திக்கத் தான் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.




