இந்தியா ஐரோப்பா செய்தி

இந்தியா-EU வர்த்தக ஒப்பந்தம்: அறிவுசார் சொத்துரிமையில் சிக்கல்

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (India-EU FTA) ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கையெழுத்திட ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் கோரியுள்ளது.

இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (India-EU FTA) ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கையெழுத்திட ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் கோரியுள்ளது.

இதில் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property – IP) தொடர்பான வரைவு விதிமுறைகள், இந்தியாவின் டிஜிட்டல் கொள்கை மற்றும் பதிப்புரிமைச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

வரைவு ஒப்பந்தத்தில் உள்ள பதிப்புரிமை விதிகளின்படி, இந்தியாவின் 1957-ஆம் ஆண்டைய பதிப்புரிமைச் சட்டத்தில் (Copyright Act, 1957) திருத்தங்களைச் செய்ய வேண்டி வரலாம்.

சர்வதேச அளவில் டிஜிட்டல் பதிப்புரிமை மற்றும் மென்பொருள் சார்ந்த பாதுகாப்புகளை உறுதி செய்யும் “WCT” (WIPO Copyright Treaty) உடன்படிக்கையை, வரைவு ஒப்பந்தத்தின் (National Treatment) பிரிவிலிருந்து நீக்கியுள்ளது.

இதன் காரணமாக, டிஜிட்டல் படைப்புகளுக்கான பதிப்புரிமை விதிவிலக்குகளை இந்தியா பயன்படுத்த முடியாத சூழல் உருவாகலாம் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் தற்போதைய வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், கல்வி, ஆராய்ச்சி மற்றும் இணையச் சேவை நிறுவனங்களுக்கு (ISPs) சட்டப்பூர்வமாகக் கிடைக்கும் டிஜிட்டல் பதிப்புரிமை விலக்குகள் பறிபோகும் அபாயம் உள்ளது. இது மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் சுயாதீன ஆய்வுகளுக்குப் பெரும் தடையாக அமையலாம்.

இந்தியப் பேச்சாளர்கள் (Negotiators) இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், WCT உடன்படிக்கையை மீண்டும் தேசிய பிரிவில் சேர்க்க வலியுறுத்த வேண்டும் என்றும் குறித்த கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது முக்கியம் என்றாலும், நாட்டின் டிஜிட்டல் இறையாண்மை, தகவல் அறியும் உரிமை மற்றும் கண்டுபிடிப்புச் சுதந்திரம் ஆகியவற்றைப் பலியிட்டு இதனைச் செய்யக்கூடாது என்று இக்கட்டுரை வலியுறுத்துகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி