இந்தியா செய்தி

இஸ்ரேலுடனான இந்திய பாதுகாப்பு உறவு சிறந்தது: Gen Z தலைமுறை கருத்து

அமெரிக்கா, பிரான்ஸ் நாடு​களைக் காட்​டிலும் இஸ்ரேல் உடனான இந்தியா​வின் பாது​காப்பு உறவு மிக​வும் சிறந்தாக இருக்​கும் என்​பது ஜென் ஸி தலை​முறை​யினரிடையே நடத்​தப்​பட்ட கருத்​துக் கணிப்​பில் தெரிய​வந்​துள்​ளது.

அமெரிக்கா, பிரான்ஸ் நாடு​களைக் காட்​டிலும் இஸ்ரேல் உடனான இந்தியா​வின் பாது​காப்பு உறவு மிக​வும் சிறந்தாக இருக்​கும் என்​பது ஜென் ஸி தலை​முறை​யினரிடையே நடத்​தப்​பட்ட கருத்​துக் கணிப்​பில் தெரிய​வந்​துள்​ளது.

1990 களின் பிற்​பகுதியி​லிருந்து 2010-களின் தொடக்​கம் வரை பிறந்த இளைஞர்கள் ஜென் ஸி தலை​முறை​யினர் என்று அழைக்கப்​படு​கின்​றனர்.

இந்​தி​யா​வின் பாது​காப்பு மற்​றும் ராஜதந்​திர உறவு​கள் குறித்து அவர்​களிடம் கருத்​துக் கணிப்பு நடத்​தப்​பட்​டது.

இதில், அமெரிக்கா மற்​றும் பிரான்ஸ் போன்ற பாரம்​பரிய நட்பு நாடு​களை​விட இஸ்​ரேல் உடனான இந்​தி​யா​வின் நட்பு மிக வலு​வான​தாக இருக்​கும் என இந்​தியா இஸ்​ரேல் மையம் ஏஐ தளங்​கள் மூலம் நடத்​திய ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

18 முதல் 29 வயதுக்​குட்​பட்ட இளைஞர்​களில் 52% பேர், இந்​தியா – இஸ்​ரேல் இடையி​லான பாது​காப்பு உறவு மிக​வும் வலு​வாக இருப்​ப​தாகக் கருதுகின்​றனர்.

இதன்​மூலம் ரஷ்​யா​வுடன் இணைந்து பாது​காப்​புப் பங்​களிப்​பில் இஸ்​ரேலை மூன்​றாவது இடத்​தில் இளைஞர்​கள் வைத்​துள்​ளனர். இதற்கு அடுத்​த​படி​யாக பிரான்ஸ் 51 சதவீதத்​துட​னும், அமெரிக்கா 46 சதவீதத்​துட​னும் உள்​ளன.

கருத்​துக்​கணிப்​பில் பங்​கேற்​றவர்​களில் 41% பேர் இந்​தி​யா​வின் முக்​கிய ராஜதந்​திர கூட்​டாளி​களில் ஒன்​றாக இஸ்​ரேலை மதிப்பிட்டுள்​ளனர்.

இது அமெரிக்​காவை (39%) விட அதி​க​மாகும். பெரும்​பான்​மை​யான ஜென் ஸி தலை​முறை​யினர், இந்​தி​யா​வின் முதன்மை பாது​காப்​புப் பங்​காளி​களாக ரஷ்யா மற்​றும் அமெரிக்காவையே கருதி வந்​தனர்.

தற்போது இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டு 22 முதல் 25 வயதுக்​குட்​பட்ட இளைஞர்​கள், இந்தியா – இஸ்​ரேல் இடையி​லான வலு​வான கூட்​டுறவுக்கு அதிக ஆதரவு அளிப்​பது தெரிய​வந்​துள்​ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி