இந்தியா செய்தி

அஜித் தோவல் பகிர்ந்த திடுக்கிடும் உளவுத்துறை அனுபவம்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், தனது ஆரம்பகால உளவுப் பணியின் போது சந்தித்த மிகக் கடினமான தருணம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், தனது ஆரம்பகால உளவுப் பணியின் போது சந்தித்த மிகக் கடினமான தருணம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

எல்லையைக் கடந்து அனுப்பப்பட்ட உளவுப் படையினர் சிலர் காணாமல் போய், பின்னர் சீனாவிடம் சிக்கிய சம்பவம் குறித்து அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

ரூர்க்கி ஐஐடி (IIT Roorkee) பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய அஜித் தோவல், இது குறித்துக் கூறியதாவது:

“எல்லையைக் கடந்த வீரர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லாததால் நான் மிகுந்த கவலையடைந்தேன். பனிச்சரிவு ஏற்பட்டதாகவும் எந்த அறிக்கையும் வரவில்லை.

5 அல்லது 6 நாட்களில் திரும்ப வேண்டியவர்கள் 10 நாட்களுக்கு மேலாகியும் வராத நிலையில், தலைமையகத்தில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

அழைப்பில் பேசிய அவரது மேலதிகாரி, வீரர்கள் சீனக் காவலில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சீன அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக என் மீது விசாரணை தொடங்கப்பட்டது. அப்போது எனக்கு 20 வயதுதான் ஆகி இருந்தது. இச்சம்பவத்தால் எனது தொழில் வாழ்க்கை இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், புதிய தொழிலைத் தேட வேண்டும் என்றும் நினைத்தேன்,” என்று தோவல் தெரிவித்தார்.

இருப்பினும், நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் அஜித் தோவல் மீது எந்தத் தவறும் இல்லை என்பது தெரியவந்தது.

தலைமையகத்தில் இருந்து வழங்கப்பட்ட வரைபடங்கள் மற்றும் வரைபடச் சித்தரிப்புகளில் (Sketches & Maps) இருந்த தவறுகளே அந்த வீரர்கள் தவறுதலாகச் சீனா எல்லைக்குள் செல்லக் காரணம் என்பது கண்டறியப்பட்டது.

மேலும், இன்றைய இளைய தலைமுறையினருக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகள் குறித்துப் பேசிய அவர், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் நிறைந்த அதிர்ஷ்டசாலி தலைமுறையாக தற்போதைய இளைஞர்கள் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி