ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு விக்டோரியாவில் கார் மோதியதில் படுகாயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

இரு கால்களும் அகற்றப்பட்டன; ஆஸ்திரேலிய பெண் எம்.பி.யின் உடல்நிலை சீராகிறது

  • October 24, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு விக்டோரியாவில் கார் மோதியதில் படுகாயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதான சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான ஹெலன் ஹெய்ன்ஸ், மெல்பேர்னுக்கு வடகிழக்கே அமைந்துள்ள வங்கரட்டா நகரில் உள்ள தனது தொகுதி அலுவலகத்துக்கு வெளியே கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் படுகாயமடைந்தார். அதிகாரிகளின் கூற்றுப்படி, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும். இந்தச் சம்பவத்தில் அவரது இரு கால்களும் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், சனிக்கிழமை காலை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், ஹெலன் […]

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், புதிதாகத் திறக்கப்பட்ட பாலம் வழியாக அண்டை நாடான சீனாவுக்குச் சென்று, அங்குள்ள டான்டோங் நகரைச் சென்றடைந்துள்ளதாக தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

புதிதாகத் திறக்கப்பட்ட பாலம் வழியாக சீனாவுக்கு சென்ற வடகொரிய ஜனாதிபதி

  • October 24, 2026
  • 0 Comments

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், புதிதாகத் திறக்கப்பட்ட பாலம் வழியாக அண்டை நாடான சீனாவுக்குச் சென்று, அங்குள்ள டான்டோங் நகரைச் சென்றடைந்துள்ளதாக தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. தென்கொரிய அரசாங்கத் தரப்பை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சின் பேச்சாளர் உடனடியாகக் கருத்து வெளியிடவில்லை. சீன வெளிவிவகார அமைச்சும் இதுவரை பதிலளிக்கவில்லை. சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில், […]

குவைத்தில் வெவ்வேறு பகுதிகளில் இரு இலங்கைப் பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பில், சந்தேக மரணங்கள் என்ற அடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கை செய்தி

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்ம மரணம்: விசாரணை ஆரம்பம்

  • October 24, 2026
  • 0 Comments

குவைத்தில் வெவ்வேறு பகுதிகளில் இரு இலங்கைப் பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பில், சந்தேக மரணங்கள் என்ற அடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முதலாவது சம்பவத்தில், அலி சபா அல்-சேலம் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையில் அமைந்துள்ள பொருட்கள் சேமிப்பு அறையில், 1988ஆம் ஆண்டு பிறந்த இலங்கைப் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, அஹ்மதி பொது வழக்குத் தொடுநர் திணைக்களம் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்யவும், சடலத்தை தடயவியல் […]

சர்வதேசப் பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 236 குற்றவாளிகள் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர் என்றும், அவர்களில் 97 பேர் பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இலங்கை செய்தி

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 236 குற்றவாளிகள் வெளிநாடுகளில்

  • October 24, 2026
  • 0 Comments

சர்வதேசப் பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 236 குற்றவாளிகள் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர் என்றும், அவர்களில் 97 பேர் பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். […]

சட்டத்தை எவர் மீறினாலும் தண்டனை உறுதி ஞானசார தேரர் விவகார போராட்டம் நியாயமற்றது இலங்கை செய்தி

சட்டத்தை எவர் மீறினாலும் தண்டனை உறுதி

  • October 24, 2026
  • 0 Comments

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் அரசு எவ்வித விட்டுக்கொடுப்புகளையும் செய்யாது என்றும், சட்டத்தை எவர் மீறினாலும் அவர்களுக்கான தண்டனை நிச்சயமாக உறுதி செய்யப்படும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் சட்டப் பொறிமுறைக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதை அவர் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டினார். அத்துடன், நீதிமன்ற தண்டனைக்கு உட்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் முற்றிலும் நியாயமற்றவை என்றும் […]

ஈரான் மோதலுக்கு இராஜதந்திரமே ஒரே தீர்வு என்று துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி

மத்திய கிழக்கு போர்: ஐரோப்பிய ராஜதந்திரிகள் துருக்கியில் முகாமிட்டு ஆராய்வு

  • October 23, 2026
  • 0 Comments

ஈரான் மோதலுக்கு இராஜதந்திரமே ஒரே தீர்வு என்று துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உயர் இராஜதந்திரிகள் கலந்துகொண்ட பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் மாநாடு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கான் பிடான் (Hakan Fidan) மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் எந்தவொரு புதிய தாக்குதலும் பிராந்தியத்தில் மோதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என எச்சரித்த அவர், இஸ்தான்புல் மாநாட்டில் […]

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்ட பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (23) பிற்பகல் பார்வையிட்டார். இலங்கை செய்தி

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்ட பணி குறித்து ஜனாதிபதி ஆராய்வு

  • October 23, 2026
  • 0 Comments

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்ட பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (23) பிற்பகல் பார்வையிட்டார். தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் கட்டமைப்பு திட்டமொன்று தயாரிக்கப்பட்டு, அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்ட முன்மொழிவாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2026-02-27 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீண்டும் ‘புதுப்பிக்கப்பட்ட அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்டம் மற்றும் அபிவிருத்தியின் போது பின்பற்ற வேண்டிய அளவுகோல்கள்’ வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் நிதி […]

ரஷ்யாவினால் 2022 பெப்ரவரி முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தெற்கு உக்ரைனின் ஒலெஷ்கி (Oleshky) நகரில், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் (Melania Trump) ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர்நிறுத்தத்தை உறுதிசெய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. உலகம் செய்தி

மெலானியா டிரம்பின் ராஜதந்திரம் வெற்றி: உக்ரைன் நகரில் போர் நிறுத்தம்

  • October 23, 2026
  • 0 Comments

ரஷ்யாவினால் 2022 பெப்ரவரி முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தெற்கு உக்ரைனின் ஒலெஷ்கி (Oleshky) நகரில், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் (Melania Trump) ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர்நிறுத்தத்தை உறுதிசெய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஒலெஷ்கி நகரில் விரைவில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என மூத்த உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த அறிவிப்பு குறித்து ரஷ்யா இதுவரை எந்தக் கருத்துமே தெரிவிக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், […]

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பில் வெளிவந்துள்ள 4ஆவது இடைக்கால அறிக்கை முற்றிலும் திசைதிருப்பப்பட்டது . உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இலங்கை

செம்மணி 4 ஆவது இடைக்கால அறிக்கை உண்மைகளை மூடி மறைக்கும் சதி

  • October 23, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பில் வெளிவந்துள்ள 4ஆவது இடைக்கால அறிக்கை முற்றிலும் திசைதிருப்பப்பட்டது . உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். […]

யாழ். மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கும் மத்தியிலும் இன்றும் 27ஆவது வாரமாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

கொட்டும் மழையிலும் 27ஆவது வாரமாக யாழ். மயிலிட்டி மக்கள் போராட்டம்

  • October 23, 2026
  • 0 Comments

யாழ். மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கும் மத்தியிலும் இன்றும் 27ஆவது வாரமாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத துயரத்தையும், நீண்டகாலமாக அனுபவித்து வரும் அவலங்களையும் சுமந்துகொண்டு, மயிலிட்டி மக்கள் தமது உரிமைக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். மழை, வெயில் என இயற்கையின் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் போராட்டத்தைக் கைவிடாது தொடர்ந்துவரும் மக்கள், இன்று பெய்த கனமழைக்கு மத்தியிலும் தமது […]