செய்தி விளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்தது Mumbai Indians

  • April 21, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் தொடர் தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது Mumbai Indians அணி. ஐபிஎல் 2026 தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் Gujarat Titans, Mumbai Indians ஆகிய அணிகள் நேற்று மோதின. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களைப் பெற்றது. […]

இலங்கை செய்தி

செம்மணி புதைகுழியை இன்று பார்வையிடுகிறது ஐரோப்பிய தூதுக்குழு!

  • April 21, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை அகழ்வுத் தளத்தை நேரில் பார்வையிடவுள்ளனர். கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அகழ்வுப் பணிகளுக்கான நிதிச் செலவினங்களுக்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காததால் பணிகள் தாமதமடைந்தன. எனினும், கடந்த வாரம் இதற்கான நிதி நீதி அமைச்சால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு மீண்டும் […]

செய்தி விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தியது பங்களாதேஷ்!

  • April 21, 2026
  • 0 Comments

பங்களாதேஷ் Bangladesh மற்றும் நியூசிலாந்து New Zealand ஆகிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் ODI போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரரான நிக் கெல்லி 102 பந்துகளில், 83 ஓட்டங்களைப் பெற்றார். பங்களாதேஷ் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளரான நஹித் ராணா 10 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் […]

இலங்கை செய்தி

ஈரான் கப்பல்மீது தாக்குதல்: சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராய்வு!

  • April 21, 2026
  • 0 Comments

இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் சர்வதேச கடல் எல்லையில் ஈரானியப் போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் டேனா IRIS Dena மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறு, கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, உத்தரவிட்டுள்ளது. தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமைக்கும் மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேவையான மதிப்பீடுகளை மேற்கொண்டு, அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இரு முகமைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் […]

இந்தியா செய்தி

இந்தியா, தென்கொரியாவுக்கிடையில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • April 21, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மையுங் Lee Jae Myung அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் புதுடெல்லி வந்தார். அவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக நேற்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய தென் கொரிய ஜனாதிபதி, பின்னர் குடியரசுத் தலைவர் […]

உலகம் செய்தி

காசாவில் இஸ்ரேல் அட்டூழியம்: 780 பேர் பலி!

  • April 21, 2026
  • 0 Comments

போர் நிறுத்தத்துக்கு பிறகும் காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்தும் தாக்குதல்களால் இதுவரையில் 780 இற்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. எனினும், போர் நிறுத்த விதிமுறையை இஸ்ரேல் மீறுவதாக பாலஸ்தீன தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுவருகின்றது. காசாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். அகதி முகாம்கள்மீதும் சிலவேளை தாக்குதல் இடம்பெறுவது குறித்து மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் […]

உலகம் செய்தி

ட்ரம்புக்கு இஸ்ரேல் அழுத்தம்?

  • April 20, 2026
  • 0 Comments

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேல் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். இத்தகைய செய்திகள் வெறும் கற்பனையானவை என்றும், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பது தனது நீண்டகால நிலைப்பாடு எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் தனது சொந்த ஆதாயத்திற்காக அமெரிக்காவை போரில் ஈடுபடுத்தியதாக பரவலாக கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கை செய்தி

இந்திய துணை ஜனாதிபதிக்கு தமிழரசுக் கட்சி அவசரக் கடிதம்!

  • April 20, 2026
  • 0 Comments

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் மீள் வருகை மற்றும் அது தொடர்பான நடைமுறைகளைத் துரிதப்படுத்துமாறு கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “நேற்று எம்முடன் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தந்தமைக்காகவும், அந்தச் சந்திப்பின் போது இலங்கைக்குத் திரும்பி வரவிருக்கும் தமிழ் அகதிகள் தொடர்பாகத் தாங்கள் வெளியிட்ட ஆக்கபூர்வமான கருத்துக்களுக்காகவும் […]

இலங்கை செய்தி

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவியேற்பு!

  • April 20, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க ,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக, அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் பங்கேற்றார். வலுசக்தி அமைச்சராக இருந்த குமார ஜயகொடி பதவி விலகியதை அடுத்தே, அனுர கருணாதிலக […]

இலங்கை செய்தி

சீதையம்மனை வழிபட்டு நாடு திரும்பினார் இந்திய துணை ஜனாதிபதி!

  • April 20, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், நுவரெலியா, சீதா எலியவிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தில் இன்று வழிபாட்டில் ஈடுபட்டார். புனித ராமாயணத்துடன் தொடர்புடைய இந்த ஆலயம், இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான ஆழமான கலாச்சார மற்றும் நாகரிகத் தொடர்புகளை நினைவூட்டும் அடையாளமாக திகழ்கிறது. அதேவேளை, நுவரெலியா ராகலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மலையக மக்களுக்கான இந்திய வீட்டுத் திட்டத்தையும் துணை ஜனாதிபதி பார்வையிட்டார். மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இலங்கைக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்த இந்திய […]