ஐரோப்பா

ஜெர்மனியில் F-16 ரக போர் விமானம் விபத்து

ஜெர்மனியில் உள்ள ஸ்பாங்டால்ம் (Spangdahlem) விமானப்படை தளத்திற்கு அருகே, அமெரிக்க விமானப்படையின் F-16 போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

பின்ஸ்பெல்ட் (Binsfeld) கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளாவதற்குச் சற்று முன்பு விமானி அதிலிருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்