செய்தி

செம்மணி மனித புதைகுழி: ஐரோப்பிய குழுவின் கண்காணிப்பு விஜயம் ஒத்திவைப்பு!

  • April 21, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று (21) பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. எனினும், தற்போது களத்தில் அகழ்வுப் பணிகள் நடைபெறாத காரணத்தால், இன்று அவர்கள் வருகை தரவில்லை. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளான வி.எஸ். நிரஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோர் […]

பொழுதுபோக்கு

இலங்கையில் சூர்யா! ரசிகர்கள் உற்சாகம்

  • April 21, 2026
  • 0 Comments

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சூர்யா மற்றும் பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். எவ்வித முன்னறிவிப்புமின்றி இவர்களின் வருகை அமைந்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர விருந்தகத்தில் எடுக்கப்பட்ட இவர்களின் படங்கள் மற்றும் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இலங்கை செய்தி

மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட பஸ் சேவை ஆரம்பம்!

  • April 21, 2026
  • 0 Comments

மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்காக “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட “தாழ்தள” (Low Floor) பஸ் சேவை இன்று (21) மாகும்புர போக்குவரத்து மையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயணிகள் பஸ் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக்கூடிய “LMT GO” எனும் கைபேசி செயலியும் (Application) இதன் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இத்திட்டம் நாட்டின் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்கதொரு முன்னெடுப்பு என்று குறிப்பிட்டார். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர், […]

செய்தி

பாகிஸ்தானின் சமரச முயற்சிக்கு சீனா முழு ஆதரவு!

  • April 21, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் தார் Ishaq Dar மற்றும் சீனத் தூதுவர் ஜியாங் ஜைடாங் Jiang Zaidong ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட பாகிஸ்தான் மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகளை சீன தூதுவர் பாராட்டியுள்ளார்.

இலங்கை செய்தி

7 ஆண்டுகள் கடந்தும் நீதி எங்கே? மட்டக்களப்பில் உணர்வுப்பூர்வமாக அஞ்சலி!

  • April 21, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. இன்று காலை 9.05 மணியளவில் சீயோன் தேவாலய முன்றலில் நினைவேந்தல் ஆரம்பமானது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கண்ணீர் மல்க, மலர் அஞ்சலி செலுத்தி, சுடரேற்றி குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர். அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு காந்தி […]

உலகம் செய்தி

ஈரான் தூதுக்குழு பாகிஸ்தான் வருவதில் இழுபறி!

  • April 21, 2026
  • 0 Comments

ஈரான் தூதுக்குழுவினர், இஸ்லாமாபாத்துக்கு பயணம் மேற்கொள்ளவில்லை என அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான 2ஆம் சுற்று அமைதி பேச்சுக்காக ஈரான் தூதுக்குழு பாகிஸ்தான் சென்றுள்ளது என தகவல் வெளியான நிலையிலேயே இவ்வாறு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமைதி பேச்சுவார்த்தைகளையும் நடத்த முடியாது என்பதில் ஈரான் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, அமைதி பேச்சுக்காக அமெரிக்காவின் துணை ஜனாதிபதி இன்று பாகிஸ்தான் செல்வார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]

இலங்கை செய்தி

அமைதிக்கான நடை பயணம்: தேரர்கள் இலங்கை வருகை!

  • April 21, 2026
  • 0 Comments

‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைப்பயணத்திற்காக , அமெரிக்காவில் அமைதிக்கான நடைபயணத்திற்குத் தலைமை தாங்கிய வண. பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்கள், இன்று (21) முற்பகல் நாட்டை வந்தடைந்தனர். இந்த அமைதிக்கான நடைப்பயணத்தில் கலந்துகொண்டு, உலகம் முழுவதும் அன்பைப் பெற்ற ‘ஆலோகா’ (Aloka) என்ற நாயும் அவர்களுடன் வருகை தந்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வண. பஞ்ஞாகர தேரர் தலைமையிலான தேரர்களை, புத்தசாசன, சமய மற்றும் […]

அரசியல் இலங்கை செய்தி

சுற்றுலாசென்ற அரசியல்வாதி துப்பாக்கியுடன் கைது!

  • April 21, 2026
  • 0 Comments

“ சொக்கா மல்லி” என்றழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர,Premalal Jayasekara நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதிப்பத்திரமற்ற கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிரேமலால் ஜயசேகர தனது குடும்பத்தாருடன் நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில் அவிசாவளை பகுதியில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த தரப்பினருடன், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது பிரேமலால் ஜயசேகர துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார் என நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது […]

உலகம் செய்தி

ஈரானிலுள்ள யுரேனியத்தை மீட்பது கடினம்: ட்ரம்ப்

  • April 21, 2026
  • 0 Comments

ஈரானிலுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்டெடுப்பது மிகவும் கடினமான பணியாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான விபரங்களை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் 125 போர் விமானங்கள் மூலம் ஈரானிய அணுசக்தி தளங்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். எனினும், நிலத்தடியில் புதைந்துள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்டெடுப்பது மிகவும் கடினமான மற்றும் நீண்ட காலப் பணியாக […]

செய்தி விளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்தது Mumbai Indians

  • April 21, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் தொடர் தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது Mumbai Indians அணி. ஐபிஎல் 2026 தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் Gujarat Titans, Mumbai Indians ஆகிய அணிகள் நேற்று மோதின. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களைப் பெற்றது. […]