ஐரோப்பா

மென்செஸ்டரில் யூத சமூகத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் – இருவர் கைது

மென்செஸ்டர் பகுதியில்  யூத சமூகத்திற்கு அச்சுறுத்தலாக கருதப்படும்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பயங்கரவாதச் சட்டம் 2000-இன் பிரிவு 41-இன் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

30 வயதுகளில் உள்ள இரண்டு ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மென்செஸ்டரில் உள்ள நியூட்டன் தெருவில் கைது செய்யப்பட்டு, தற்போது லண்டன் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போதும் எந்த அச்சுறுத்தலும் இருப்பதாகத் தாங்கள் நம்பவில்லை என பொலிஸார் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்