உலகம் செய்தி

தைவானை பாதுகாக்குமா அமெரிக்கா? ட்ரம்பிடம் நேரில் வினா தொடுத்த சீன ஜனாதிபதி!

  • May 15, 2026
  • 0 Comments

சீன ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது, தைவான் விவகாரம் குறித்து தான் எந்தவொரு உறுதிமொழியையும் வழங்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீன விஜயத்தை நிறைவு செய்து வாஷிங்டன் திரும்பும் வழியில் விமானத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தைவானுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அமெரிக்கா அதைப் பாதுகாக்குமா என்று சீன ஜனாதிபதி தன்னிடம் நேரடியாகக் கேட்டதாகவும், அதற்கு “நான் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை” என்று பதிலளித்தாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், […]

உலகம் செய்தி

ட்ரம்பின் விஜயத்தையடுத்து சீனாவில் களமிறங்குகிறார் புடின்!

  • May 15, 2026
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் விரைவில் பெய்ஜிங்கில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது. இந்த உயர்மட்ட சந்திப்பின் போது அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், சீனப் பயணம் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாக ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதியும் அங்கு […]

செய்தி

முதல்வராகிறார் விஜய்: தமிழக அமைச்சரவையும் பதவியேற்பு!

  • May 10, 2026
  • 0 Comments

தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கவுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்;றியது. எனினும், விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு வழங்கின. அந்தவகையில் தவெக ஆட்சிக்கு 120 சட்;டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிட்டியுள்ளது. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் நேற்று […]

இலங்கை செய்தி

யாழிலும், வன்னியிலும் மே தினம் நடத்துகிறது NPP

  • April 29, 2026
  • 0 Comments

  சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி , 21 மாவட்டங்களில் 21 மேதின கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா மேற்படி தகவலை வெளியிட்டார். “மக்கள் ஆட்சிக்கு பலம்” எனும் தொனிப்பொருளின்கீழ் தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா கூறியவை வருமாறு, “கொழும்பில் இம்முறை பிரதான மேதின […]

உலகம் செய்தி

ஈரானின் முக்கிய இலக்குகள்மீது இஸ்ரேல் தாக்குதல்!

  • April 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளங்கள் IRGC மீது பாரிய வான்வழித் தாக்குதல்களை இன்று (2) நடத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று 35 ஆவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் மேற்படி தாக்குதலில் ஈரானியப் படையினரின் தரைப்படை முகாம்கள், உயர் தளபதிகள் தங்கியிருந்த நடமாடும் தலைமையகம் மற்றும் ballistic ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் ஆகியவை குறிவைக்கப்பட்டன. தற்போதைய […]

அரசியல் இலங்கை செய்தி

போர் சூழலில் தேசிய பாதுகாப்பு குறித்து சிந்தித்தே முடிவெடுக்க வேண்டும்: சஜித்!

  • March 7, 2026
  • 0 Comments

“உலகில் போர் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில், ஒரு நாடாக நாம் நாடு குறித்தும், தேசிய பாதுகாப்பு குறித்தும் சிந்தித்து சமநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (07) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ ஒரு நாடாக, இன்று நாம் பல சவால்களை எதிர்கொள்கிறோம். பல ஆபத்துகளும் சவால்களும் நம்மை நோக்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், […]

உலகம்

ஈரான்மீதான போரில் ஆஸ்திரேலியா பங்கேற்கவில்லை!

  • March 2, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதலில் தமது நாடு பங்கேற்கவில்லை என்று ஆஸ்திரேலியா Australia தெரிவித்துள்ளது. மேற்படி தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே ஆஸ்திரேலியாவுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் Penny Wong தெரிவித்தார். ஈரான் மக்களின் உரிமைகளைப் பறித்த அந்தத் தலைவரின் மறைவுக்காக ஆஸ்திரேலியப் பிரதமர் அனுதாபம் தெரிவிக்கப்போவதில்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். அதேவேளை, ஈரான்மீது ஆஸ்திரேலியா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஆஸ்திரேலியா

9 மாதங்களுக்குள்ளேயே தலைமைப் பதவியை இழந்த ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி தலைவர்!

  • February 13, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் Liberal Party புதிய தலைவராக ஆங்கஸ் டெய்லர் Angus Taylor தெரிவு செய்யப்பட்டுள்ளார். இனி அவரே நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், எதிரணி கூட்டணி தலைவராகவும் செயல்படுவார். கட்சியால் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை ஏற்று, கட்சியை வெற்றிபாதை நோக்கி அழைத்து செல்வதற்கு தீவிரமாக செயல்படபோவதாக அவர் உறுதியளித்துள்ளார். தலைமைப் பதவிக்காக கட்சிக்குள் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே Sussan Ley , அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். […]

இலங்கை செய்தி

கஸ்ஸப தேரர் உட்பட 10 பேருக்கு நிபந்தனையுடன் பிணை!

  • February 11, 2026
  • 0 Comments

திருகோணமலை- கடற்கரையில் கடல் பாதுகாப்பு சட்டத்தை மீறி சட்டவிரோத கட்டுமானம் அமைத்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கும் திருகோணமலை மேல் நீதிமன்றம் (11) பிணை வழங்கியுள்ளது. இவ்வழக்கு நீதவான் நீதிமன்றில் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் தொடர்ந்து எதிராளிகளுக்கான பிணை கோரிக்கைக்கான மனு தொடர்பான விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது இதனை அடுத்து 10 எதிராளிகளையும் பிணையில் விடுப்பதற்கான உத்தரவினை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் வழங்கினார். இதன்படி மீளவும் […]

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம்: ஐரோப்பிய குழுவிடம் தமிழரசுக் கட்சி கோரிக்கை!

  • February 11, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களுடன், ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் பல தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே தமிழரசுக் கட்சியினருடன் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர். “ பயங்கரவாத தடைச் சட்டம் நீக்குதல் மற்றும் புது வரைபு, மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட வேறு பல விடயங்களை இதன்போது […]