இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதல்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டி இன்று(01) நடைபெறவுள்ளது.
ரிவர்சைடு Riverside Stadium மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய T20 கிரிக்கெட் அணி கடந்த வாரம் அயர்லாந்தில் அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற இருதரப்பு T 20 தொடரை இந்திய அணி 2-0 என இழந்திருந்தது.
அயர்லாந்து சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில் 5T 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, இங்கிலாந்து சென்றுள்ளது.
அயர்லாந்து ஆடுகளத்தில் இந்திய அணி வீரர்கள் துடுப்பெடுத்தாட சிரமப்பட்டனர். 15 வயதாகும் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு அயர்லாந்து தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இது விவாதப் பொருளாக மாறியிருந்தது. எனினும் இங்கிலாந்து தொடரிலும் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகமே.
ஒருவேளை அவர், களமிறங்கும் பட்சத்தில் சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன் நீக்கப்படக்கூடும்.
சஞ்சு சாம்சன் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 5 ரன்களும், 2 ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறி இருந்தார். இஷான் கிஷன் இரு ஆட்டங்களையும் சேர்த்து 13 ரன்கள் எடுத்திருந்தார்.
அயர்லாந்து தொடரில் ஸ்ரேயஸ் ஐயர், திலக் வர்மா, அபிஷேக் சர்மா உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரிடம் இருந்து பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை.
கடைசி போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக திலக் வர்மா தடுமாறினார். அவர், அரை சதம் அடித்த போதிலும் 46 பந்துகளை எதிர்கொண்டு 55 ரன்களே சேர்த்தார்.
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இவர்கள் கவனமுடன் செயல்படக்கூடும்.




