இலங்கை செய்தி

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் சுரேஷ் சலே

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது, விசாரணை அதிகாரிகளை மாற்றுமாறு கோரி அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (01) கைவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது, விசாரணை அதிகாரிகளை மாற்றுமாறு கோரி அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைல் இதயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையைப் பின்பற்றியே அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் கடந்த பெப்ரவரி மாதம் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருந்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை