போலந்தில் கத்திகுத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு
போலந்தில் உள்ள பெனடிக்டைன் Benedictine துறவிமடத்தின் வளாகத்தில் இன்று கத்தி குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 31 வயதான உக்ரேனிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலின் பின்னணி அல்லது நோக்கம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




