கீவ் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் – 08 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் அதன் வடகிழக்குப் பகுதிகளில் ரஷ்யா நடத்திய விமானத் தாக்குதலில் குறைந்தது எட்டுபேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் மகப்பேறு மருத்துவமனையொன்றும், பண்ணையொன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய மாதங்களில் மொஸ்கோ தனது வான்வழிப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீழ்த்துவதற்கான இடைமறிப்பு விமானங்கள் உக்ரைனிடம் பற்றாக்குறையாக உள்ள நிலையில், மொஸ்கோ தனது வேகமான மற்றும் தடுத்து நிறுத்தக் கடினமான ஆளில்லா விமானங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது.
இதற்கமைய நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில், குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான ஹைப்பர்சோனிக் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், 282 ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்கள் அடங்கியிருந்ததாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.





