ஐரோப்பா

கீவ் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் – 08 பேர் உயிரிழப்பு

  • September 24, 2026
  • 0 Comments

உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் அதன் வடகிழக்குப் பகுதிகளில் ரஷ்யா நடத்திய விமானத் தாக்குதலில் குறைந்தது எட்டுபேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில்  மகப்பேறு மருத்துவமனையொன்றும்,  பண்ணையொன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. சமீபத்திய மாதங்களில் மொஸ்கோ தனது வான்வழிப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீழ்த்துவதற்கான இடைமறிப்பு விமானங்கள் உக்ரைனிடம் பற்றாக்குறையாக உள்ள நிலையில், மொஸ்கோ தனது வேகமான மற்றும் தடுத்து நிறுத்தக் கடினமான ஆளில்லா விமானங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. இதற்கமைய நேற்று இரவு நடத்தப்பட்ட […]

உலகம்

கீவ் பிராந்தியத்தில் ரஷ்யா தொடர் தாக்குதல் – 04 பேர் உயிரிழப்பு

  • September 21, 2026
  • 0 Comments

கீவ் (Kyiv) பிராந்தியத்தில் ரஷ்யா நேற்றிரவு நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக அப்பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாள் முழுவதும் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ (Vitali Klitschko) தலைநகரின் பல்வேறு பகுதிகளில் சிதிலங்கள் விழுந்ததாக தெரிவித்துள்ளார். தென்மேற்குப் பகுதியான ஃபாஸ்டிவ் (Fastiv) மாவட்டத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு வீடுகள், தொழிற்சாலை மற்றும் பயன்பாட்டுக் கட்டிடங்கள், விவசாய […]

ஐரோப்பா

கீவில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 27 பேர் உயிரிழப்பு

  • August 29, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் ஆளில்லா விமானத் தாக்குதலால் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கீவ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் டைமூர் தகாசென்கோ Tymur Tkachenko, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். “ரஷ்ய ஆளில்லா விமானங்கள் ஒரு கிடங்கைத் தாக்கியதால் ஏற்பட்ட வெடிப்பு, அப்பகுதி முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியது” […]