AI-ஆல் தொழில்வாய்ப்பை இழக்கும் மக்கள் – சீனாவில் நெருக்கடிநிலை
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியால் சீனாவின் தொழிலாளர் சந்தை அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான பல்கலைக்கழக பட்டதாரிகள் வேலை கிடைக்காததால் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
இதன் விளைவாக, சீனாவின் நகர்ப்புற இளைஞர்களின் வேலையின்மை விகிதம் கடந்த மாதம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தேசிய புள்ளியியல் பணியகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, மாணவர்களைத் தவிர்த்து, 16 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதம் ஜூலையில் 17.9 சதவீதத்திலிருந்து ஆகஸ்டில் 18.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உயர்ந்துவரும் இளைஞர் வேலையின்மை விகிதம் மற்றும் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவை, இளைஞர்கள் தங்கள் வேலை வாய்ப்புகளை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





