இம்ரான் கானின் சகோதரி மற்றும் ஆதரவாளர்கள் கைது – அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிவிப்பு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரிகளையும், பிடிஐ கட்சி தொண்டர்களையும் பாகிஸ்தான் அரசு சட்டவிரோதமாகக் கைது செய்துள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தன்னிச்சையான நடவடிக்கை, மக்களின் கருத்துச் சுதந்திரத்தின் தெளிவான மீறலாகும் என்று அந்த அமைப்பின் தெற்காசிய பிராந்திய துணை இயக்குநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டத்தை ஒடுக்குவதற்காக இஸ்லாமாபாத்தில் சாலைத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஒரு போராட்டம் தொடங்குவதற்கு முன்பே அதை வன்முறைப் போராட்டம் என்று வகைப்படுத்துவது நியாயமற்றது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறும், அமைதியான முறையில் கூடுவதற்கான உரிமையை உறுதி செய்யுமாறும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் பாகிஸ்தான் அரசை வலியுறுத்துகிறது.




