உலகம்

ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் ஏற்றுமதி : ஈராக், அமெரிக்கா இடையில் ஒப்பந்தம்

ஈராக் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஈராக் வெளியுறவு அமைச்சர் ஃபுவாட் ஹுசைன்,  ஓமானுக்கு அருகிலுள்ள கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக   எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தம்  எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  ஈரானில் நடந்த போர் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்பட்ட இடையூறுகளால் ஈராக் சந்தித்த பொருளாதார இழப்புகள் 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், கடந்த மாதம் கடுமையாகச் சரிந்த ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதி, அக்டோபரில் மீண்டுள்ளது.

ஈராக் எரிசக்தி அதிகாரிகளின் கூற்றுப்படி, செப்டம்பரில் ஒரு நாளைக்கு 2.65 மில்லியன் பீப்பாய்களாக இருந்த ஏற்றுமதி, அக்டோபரில் ஒரு நாளைக்கு சுமார் 3.5 மில்லியன் பீப்பாய்களாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்