உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல்

  • September 18, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியில்  எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல் ஒன்றை ஈரான் தாக்கியுள்ளது. குறித்த கப்பல் சட்டவிரோதமாக பயணம் செய்ததாக குற்றம் சாட்டியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்திய ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, டோகோ நாட்டுக் கொடியை ஏந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. இந்தத் தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதன் பயணம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.  

உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் ஒன்றின் மீது தாக்குதல்

  • September 13, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையில் இன்று கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளது. ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளுக்கு அப்பால் ஒரு சரக்கு கப்பல் தாக்கப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப் பாதையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையே மோதல் நிலவி வரும் சூழலில் இச்சம்பவம் நடந்துள்ளது. எனினும், தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.  

உலகம்

ஹார்மூஸ் ஜலசந்தியில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் – ஈரான் எச்சரிக்கை

  • September 6, 2026
  • 0 Comments

ஈரானின் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில்  ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழைய முயன்ற அமெரிக்க கடற்படை ஆளில்லா விமானத்தை தங்கள் படைகள் குறிவைத்ததாக ஈரான் இன்று அறிவித்தது. இது தொடர்பில் ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீர்வழிக்குள் நுழையவிருந்த   “ஆளில்லா மேற்பரப்புக் கப்பல்” மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது. ஆக்கிரமிப்பாளரான அமெரிக்கா, இப்பகுதியை விட்டு வெளியேறி தனது […]

உலகம் செய்தி

ஹார்மூஸ் ஜலசந்தி அல்ல ட்ரம்ப் ஜலசந்தி – பெயரை மாற்ற பரிந்துரை

  • September 2, 2026
  • 0 Comments

ஈரானுடனான போருக்கு மத்தியில் ஹார்மூஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றி ட்ரம்ப் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று வெளியிட்ட அறிவிப்பொன்றில்,  ஹார்முஸ் ஜலசந்திக்கு “ட்ரம்ப் ஜலசந்தி” எனப் பெயர் மாற்றப் பரிந்துரைத்தார். “இப்போது அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை டிரம்ப் ஜலசந்தி என்று மாற்ற வேண்டுமா??? அமெரிக்காவைப் போலவே, அதுவும் முன்னெப்போதையும் விட ‘சூடாக’ இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில், ஒன்டாரியோ ஏரிக்கு “அமெரிக்கா […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஒருவழியாக உடன்பாட்டிற்கு வந்த ஈரான் – ஓமான்

  • August 16, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்திக்கான கப்பல் வழித்தட வரைபடம் குறித்து ஈரான் ஓமானுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தடைகள் இருந்தபோதிலும்” கடந்த மூன்று வாரங்களாகப் பேச்சுவார்த்தைகள் சாதகமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும் எஞ்சிய பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஏற்பாடு, இரு நாடுகளின் இறையாண்மையைப் […]

உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்?

  • August 12, 2026
  • 0 Comments

ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில், “ஹார்முஸ் ஜலசந்தியின் மீது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது. அதை நாம் தக்க வைத்துக் கொள்வோம் என்று நான் நினைக்கிறேன்! நமது கடற்படை முற்றுகையை அனைவரும் ‘எஃகுச் சுவர்’ என்று அழைக்கிறார்கள், மேலும் அதைப்பற்றி ஈரான் எதுவும் செய்ய முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.

உலகம்

ஈரான், ஓமான் ஒப்பந்தம் – ஹோர்மூஸ் ஜலசந்தியை மீளவும் திறக்கக்கூடும் : நம்பிக்கையில் அமெரிக்கா

  • August 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் ஓமான் விரைவில் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் என்றும், அது ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வழிவகுக்கும் என்றும் அமெரிக்கா எதிர்பார்ப்பதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 05 மாதமாக  தடைபட்ட எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா நம்புவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “ஜலசந்தி விவகாரத்தில் ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, விரைவில் ஒரு ஒப்பந்தத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ரொய்டர்ஸ் […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கும் சுமார் 6,000 மாலுமிகளை மீட்க ஐ.நா அவசரக் கோரிக்கை

  • July 24, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கும் சுமார் 6,000 மாலுமிகளை மீட்டுத் தாயகம் திரும்ப உதவுமாறு, மத்தியக்கிழக்கில் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை  கேட்டுக்கொண்டுள்ளது. அந்த நீர்வழியில் “கடுமையான மனிதாபிமான மற்றும் மனித உரிமை நெருக்கடியை” எதிர்கொண்டுள்ள,  ஆயிரக்கணக்கான மாலுமிகளின் அவல நிலையைச் சரிசெய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பின் தலைவர், வோல்கர் டர்க் அழைப்பு  விடுத்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஷபியா மன்டூ கூறினார். ஜெனீவாவில் இன்று நடந்த செய்தியாளர் […]

உலகம்

தெஹ்ரான் கப்பல்களை குறிவைத்தால், அமெரிக்கா மின் கட்டமைப்புகளை குறிவைக்கும்

  • July 22, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியில் தெஹ்ரான் கப்பல்களை குறிவைத்தால், அமெரிக்கா ஈரானின் பாலம் அல்லது மின் கட்டமைப்பு அமைப்பை  தாக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசு ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏவுகணை, ரொக்கெட், ட்ரோன் அல்லது வேறு எந்த சாதனம் அல்லது ஆயுதம் மூலமாக   கப்பலைத் தாக்கும் போதெல்லாம், அமெரிக்கா தெஹ்ரானுக்கு அருகில் அல்லது உள்ளே அமைந்துள்ள பாலம், மின்கட்டமைப்புகளை குண்டு […]

உலகம்

ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்ற இரு எண்ணெய் கப்பல்கள் தீப்பற்றி எரிவதாக தகவல்

  • July 18, 2026
  • 0 Comments

ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடி விபத்துகளுக்குப் பிறகு தீப்பிடித்து எரிவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. குறிப்பாக கடல்சார் கண்காணிப்பை மேற்கொள்ளும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) அமைப்பிடமிருந்து எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் ​அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு காரணமாக, இந்த நீர்வழிப்பாதை “மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது என ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC)  அறிவித்துள்ளது. ​தெற்குப் பகுதியில் “பரவலாக கண்ணிவெடிகள் […]