உலகம்

மஸ்க் மற்றும் மில்லருக்கு செக் – ஜனநாயகக் கட்சியினர் உறுதி

அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தலுக்கு பின்னர் ஜனநாயகக்கட்சியினர் காங்கிரஸின் கட்டுப்பாட்டை பெறும்போது, ட்ரம்பால் நியமிக்கப்பட்ட வெள்ளை மாளிகையின் தலைமை ஊழியர் ஸ்டீபன் மில்லர் மற்றும் சில பெரிய நிறுவனங்களும், எலான் மஸ்கும் நாடாளுமன்ற விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என மூத்த சட்டமியற்றுபவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அரசாங்க செயல்திறன் துறை கூட்டாட்சி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததில் மஸ்க்கின் ஈடுபாடு குறித்தும், ட்ரம்பின் கடுமையான குடியேற்ற ஒடுக்குமுறையில் மில்லரின் பங்கு குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் அமெரிக்கப் பிரதிநிதி ராபர்ட் கார்சியா மற்றும் மாசசூசெட்ஸின் அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரன் ஆகியோர், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஜனநாயகக் கட்சியினிரின் மகத்தான வெற்றியை தொடர்ந்து தீவிரமான மேற்பார்வையை மேற்கொள்வதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

இதற்கிடையில், பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ் Hakeem Jeffries , அவரும் அவரது சக ஜனநாயகக் கட்சியினரும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தின் Pete Hegseth  பதவி நீக்கத்தை ஆதரிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்