உலகம்

அணுவாயுத ஒழிப்பு தொடர்பில் சீனா மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுடன் பேச்சு – ட்ரம்ப் திட்டவட்டம்

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய  ஜனாதிபதி  விளாடிமிர் புதின் ஆகியோரைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஈரானில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் அணு ஆயுத ஒழிப்பு குறித்து விவாதிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புளோரிடாவிலிருந்து வொஷிங்டனுக்குத் திரும்புவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், நவம்பர் 18-19 ஆம் திகதிகளில் சீனாவின் ஷென்செனில் நடைபெறவுள்ள APEC உச்சிமாநாட்டில் பங்கேற்கச் செல்லவிருப்பதாகக் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை அணு ஆயுத ஒழிப்பை மையமாகக் கொண்டு, ஷி மற்றும் புதினுடன் முத்தரப்பு ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தான் தயாராக இருப்பதாக ட்ரம்ப் கடந்த ஒக்டோபர் மாதமே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்