தெஹ்ரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இல்லம் மற்றும் வளாகம் அழிக்கப்பட்டதன் முதல் காணொளியை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. உலகம் செய்தி

அமெரிக்கத் தாக்குதலில் அழிக்கப்பட்ட அலி கமேனியின் இல்லத்தின் முதல் காணொளி வெளியானது

  • July 9, 2026
  • 0 Comments

தெஹ்ரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இல்லம் மற்றும் வளாகம் அழிக்கப்பட்டதன் முதல் காணொளியை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அவரது இறுதிச் சடங்கின்போது இந்தக் காணொளி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில் 86 வயதான அலி கமேனி வீரமரணம் அடைந்தார். சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலில் உச்ச தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் உயிரிழந்தனர், அதேவேளையில் அவரது மகனும் தற்போதைய உச்ச தலைவருமான […]

ஐரோப்பா

டோமஹாக் குரூஸ் ஏவுகணைகளை ஜெர்மனியில் நிலைநிறுத்த அமெரிக்கா பச்சைக்கொடி

  • July 9, 2026
  • 0 Comments

டோமஹாக் குரூஸ் ஏவுகணைகளை கொள்வனவு செய்து அதனை நிலைநிறுத்துவதற்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) தெரிவித்துள்ளார். பெர்லினில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் போது அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த உச்சிமாநாடு தனது எதிர்பார்ப்புகள் அனைத்தும் விஞ்சிவிட்டதாகவும் மெர்ஸ் தெரிவித்துள்ளார். “இதன் மூலம், நமது பாதுகாப்பில் உள்ள ஒரு […]

'டெய்லி மெயில்' மற்றும் 'மெயில் ஒன் சண்டே' ஆகிய நாளிதழ்களின் வெளியீட்டாளரான அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக, இளவரசர் ஹாரி மற்றும் ஆறு பேர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த தனியுரிமை வழக்கில் தோல்வியடைந்துள்ளனர். ஐரோப்பா செய்தி

ஊடக நிறுவனத்திற்கு எதிரான தனியுரிமை வழக்கில் இளவரசர் ஹாரி தோல்வி

  • July 9, 2026
  • 0 Comments

‘டெய்லி மெயில்’ மற்றும் ‘மெயில் ஒன் சண்டே’ ஆகிய நாளிதழ்களின் வெளியீட்டாளரான அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக, இளவரசர் ஹாரி மற்றும் ஆறு பேர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த தனியுரிமை வழக்கில் தோல்வியடைந்துள்ளனர். 1990 முதல் 2018 வரை தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாகப் பெற்றதாக அந்தப் பத்திரிகைக் குழுமம் மீது இளவரசர் ஹாரி மற்றும் பிற பிரமுகர்கள் குற்றம் சாட்டினர். தொலைபேசி அல்லது குரல் அஞ்சலை சட்டவிரோதமாக அணுகுதல், இரகசியக் கண்காணிப்பு, மற்றும் மருத்துவ, […]

இங்கிலாந்தில் மனித உரிமைச் சட்டங்களை மீறும் சட்டவிரோதக் குடியேறிகள் நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க முடியாதபடி, மனித உரிமை அடிப்படையில் தாக்கல் செய்யப்படும் புகலிடக் கோரிக்கைகள் மீதான நடவடிக்கையை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தீவிரப்படுத்தியுள்ளார். ஐரோப்பா செய்தி

மனிதாபிமான தஞ்சம் கோருதல்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் பிரித்தானிய அரசு

  • July 9, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் மனித உரிமைச் சட்டங்களை மீறும் சட்டவிரோதக் குடியேறிகள் நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க முடியாதபடி, மனித உரிமை அடிப்படையில் தாக்கல் செய்யப்படும் புகலிடக் கோரிக்கைகள் மீதான நடவடிக்கையை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தீவிரப்படுத்தியுள்ளார். பிரித்தானிய ஊடகங்களின்படி, தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் இந்த புதிய சட்டம், ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டின் (ECHR) 8வது பிரிவின் கீழ் உள்ள குடும்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கான உரிமை மீறல்களைத் தடுக்கும் முயற்சிகளில் ஒரு முன்னேற்றப் படியாக அமையும். இங்கிலாந்தில் […]

உலகம்

ஈரான் கையில் உள்ள பொன்னான ஆயுதம் – அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு மறுப்பு

  • July 9, 2026
  • 0 Comments

போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் முடங்கியுள்ள நிலையில், அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. ஈரானிய வட்டாரங்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை பொன்னான ஆயுதமாக வர்ணிக்கின்றன. அதாவது உலகப் பொருளாதாரத்தின் மீதான அதன் சிறந்த செல்வாக்குச் செலுத்தும் கருவி என்றும் அதன் கட்டுப்பாட்டை விட்டுக் கொடுக்கப்போவதில்லை என்றும் உறுதிபூண்டுள்ளன. போருக்கு முன்பு, சராசரியாக தினமும் 125 வர்த்தகக் கப்பல்கள் அந்த ஜலசந்தி வழியாகச் சென்றன. பல ஆண்டுகளாக அந்த ஜலசந்தியை மூடக்கூடும் என்று ஈரான் […]

ஐரோப்பா

ஜேர்மனியில் கடும் வெப்பம் – 5000இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

  • July 9, 2026
  • 0 Comments

ஜேர்மனியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான வெப்பநிலை காரணமாக சுமார் 5,120 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் கடந்த ஜுன் மாதம் பதிவான வெப்பநிலையால் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்திற்கான ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) இன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த இறப்புகளில் சுமார் 4,270 பேர் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. . மிகவும் வயதானவர்களில் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பதால், ஆண்களை விட பெண்களே அதிகமாக உயிரிழந்துள்ளதாகவும் […]

இலங்கை

விமலுக்கு இடியாக வந்த தீர்ப்பு – தில்வின் சில்வாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்

  • July 9, 2026
  • 0 Comments

ஜேவிபியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவிற்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜேவிபியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறியதற்காக ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு முன்னதாக வர்த்தக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை மீள் பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி விமல் வீரவன்ச மனுத்தாக்கல் செய்திருந்தார். குறித்த  மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்  தள்ளுபடி செய்யப்பட்டது. […]

UK ambassador summoned in Iran over ‘baseless’ accusations ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானிய தூதுவரை நேரில் அழைத்து எதிர்ப்பு ஓலையை கையளித்தது ஈரான்

  • July 9, 2026
  • 0 Comments

தமது நாட்டுக்கு எதிராக பிரித்தானியா அதிகாரிகள் முன்வைத்துவரும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, ஈரான் வெளிவிவகார அமைச்சு, பிரித்தானிய தூதுவரை நேரில் அழைத்துக் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சின், மேற்கு ஐரோப்பாவிற்கான துணைத் தலைவர் அலிரேசா யூசுபி , லண்டனின் இந்த அணுகுமுறையை கண்டித்து தூதுவர் ஹ்யூகோ ஷார்டரிடம் (Hugo Shorter) ஒரு எழுத்துப்பூர்வமான எதிர்ப்பு கடிதத்தை வழங்கியதாக Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘Iran International’ ஊடகத்தின் ஊடகவியலாளர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட […]

உலகம்

“KILL TRUMP” : ஈரானில் ட்ரம்புக்கு எதிராக முழக்கம்

  • July 9, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யுமாறு வலியுறுத்தும் பதாதைகள் ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை மஷ்ஹத் நகரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் KILL TRUMP என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. முன்னதாக கமேனியின் இறுதி அஞ்சலியின்போது ஒன்றுக்கூடிய மக்கள் ட்ரம்பின் மரணத்தை வேண்டி கோஷமிட்டிருந்தனர். இதற்கிடையே நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய ட்ரம்ப் தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொண்டார். அத்துடன் ஈரானின் கொலை பட்டியலில் தான் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறினார். மேலும் தம்மைக் குறிவைத்து ஒரு படுகொலையை அரங்கேற்றுவதற்கு […]

இலங்கை

கைதிகள் இடமாற்றம் தொடர்பில் நீதியமைச்சு விளக்கம்

  • July 9, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளை வைத்திருப்பது பொருத்தமானதல்ல என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரங்களை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த சிறை வளாகம் ஒரு குற்ற நிகழ்விடமாகக் கருதப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தின் விளைவாக, சிறை வளாகம் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. அதன்படி, புலனாய்வாளர்கள் தங்கள் பணிகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ளவும், கைதிகளின் […]