ஜேர்மனியில் கடும் வெப்பம் – 5000இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு
ஜேர்மனியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான வெப்பநிலை காரணமாக சுமார் 5,120 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் கடந்த ஜுன் மாதம் பதிவான வெப்பநிலையால் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்திற்கான ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) இன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த இறப்புகளில் சுமார் 4,270 பேர் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
. மிகவும் வயதானவர்களில் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பதால், ஆண்களை விட பெண்களே அதிகமாக உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஜூன் 20-28 வரை நிலவிய வெப்ப அலையின் போது 4,700-க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




