UK ambassador summoned in Iran over ‘baseless’ accusations ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானிய தூதுவரை நேரில் அழைத்து எதிர்ப்பு ஓலையை கையளித்தது ஈரான்

  • July 9, 2026
  • 0 Comments

தமது நாட்டுக்கு எதிராக பிரித்தானியா அதிகாரிகள் முன்வைத்துவரும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, ஈரான் வெளிவிவகார அமைச்சு, பிரித்தானிய தூதுவரை நேரில் அழைத்துக் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சின், மேற்கு ஐரோப்பாவிற்கான துணைத் தலைவர் அலிரேசா யூசுபி , லண்டனின் இந்த அணுகுமுறையை கண்டித்து தூதுவர் ஹ்யூகோ ஷார்டரிடம் (Hugo Shorter) ஒரு எழுத்துப்பூர்வமான எதிர்ப்பு கடிதத்தை வழங்கியதாக Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘Iran International’ ஊடகத்தின் ஊடகவியலாளர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட […]

உலகம்

“KILL TRUMP” : ஈரானில் ட்ரம்புக்கு எதிராக முழக்கம்

  • July 9, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யுமாறு வலியுறுத்தும் பதாதைகள் ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை மஷ்ஹத் நகரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் KILL TRUMP என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. முன்னதாக கமேனியின் இறுதி அஞ்சலியின்போது ஒன்றுக்கூடிய மக்கள் ட்ரம்பின் மரணத்தை வேண்டி கோஷமிட்டிருந்தனர். இதற்கிடையே நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய ட்ரம்ப் தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொண்டார். அத்துடன் ஈரானின் கொலை பட்டியலில் தான் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறினார். மேலும் தம்மைக் குறிவைத்து ஒரு படுகொலையை அரங்கேற்றுவதற்கு […]

இலங்கை

கைதிகள் இடமாற்றம் தொடர்பில் நீதியமைச்சு விளக்கம்

  • July 9, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளை வைத்திருப்பது பொருத்தமானதல்ல என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரங்களை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த சிறை வளாகம் ஒரு குற்ற நிகழ்விடமாகக் கருதப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தின் விளைவாக, சிறை வளாகம் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. அதன்படி, புலனாய்வாளர்கள் தங்கள் பணிகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ளவும், கைதிகளின் […]

உலகம்

காங்கோவில் மேலும் இரு மாகாணங்களிலும் பரவி வரும் எபோலா தொற்று

  • July 9, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நோய் தொற்றானது விரிவடைந்து வருவதை உணர்த்தும் வகையில் புதிய மாகாணமொன்றில் நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மே 15 அன்று அறிவிக்கப்பட்ட இந்த நோய்ப் பரவலானது, இடுரி, வடக்கு கிவு மற்றும் தெற்கு கிவு ஆகிய கிழக்கு மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  அங்கு 1,759 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சோபோ (Tshopo) மாகாணத்தின் தலைநகரமும் […]

டெங்கு நோயினால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை செய்தி

இலங்கையில் 45 பேரின் உயிரை பலியெடுத்த டெங்கு

  • July 9, 2026
  • 0 Comments

இலங்கையில் ஜூலை மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 9,654 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 65,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்தில் மாத்திரம் 34,268 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் 13,322 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 13,150 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4,354 […]

உலகம்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் – 14 பேர் உயிரிழப்பு

  • July 9, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் சுகாதார அமைச்சகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் குறித்த தாக்குதலில்  78 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவ் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று முன்தினம் ஈரானின் 80 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து நேற்று இரவு 90 இலக்குகளை அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Australia will export uranium to India under a new agreement signed today between Prime Minister Anthony Albanese and Indian Prime Minister Narendra Modi, as the leader of the world's most populous country continues his visit to Australia. ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா இணக்கம்

  • July 9, 2026
  • 0 Comments

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே இன்று புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கன்பராவில் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பானீஸ், “2015 இந்தியா – ஆஸ்திரேலியா அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ், அமைதிப் பயன்பாட்டிற்காக இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வதற்கான நிர்வாக ஏற்பாட்டில் (administrative arrangement) இன்று நாங்கள் கையெழுத்திட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறோம்” […]

உலகம்

பாவிப் புயலின் நகர்வு : சீனா, தைவான், ஜப்பான் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

  • July 9, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலில் மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் உருவான பாவி புயல், தைவானை நோக்கிச் நகர்ந்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைத் தாக்கக்கூடிய மிக வலிமையான புயலாக இது இருக்கலாம் என்பதால், வரக்கூடிய சீரற்ற வானிலைக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 1,000 கிலோமீட்டர் விட்டம் கொண்ட இந்தப் புயல், சனிக்கிழமை மாலை சீனாவின் கிழக்கு ஃபுஜியான் மாகாணத்திற்குள் நுழைவதற்கு முன்பு, வடக்கு தைவானுக்கு […]

இலங்கை

சட்டவிரோத தங்கக் கடத்தல் – வசமாக சிக்கிய தொழிலதிபர் : 10 இலட்சம் அபராதம்

  • July 9, 2026
  • 0 Comments

சுங்கத்துறையிடம் அறிவிக்காமல் சட்டவிரோதமாக நாட்டிற்குள் தங்கத்தை கடத்த முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 11.8 மில்லியன் பெறுமதியான தகங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மாத்தளையைச் சேர்ந்த 53 வயது தொழிலதிபர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் துபாயில் இருந்து நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளார். விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அந்தப் பயணியை இடைமறித்து சோதனைகளை மேற்கொண்டனர். அவரது உடமைகளை […]

போகம்பறை சிறைச்சாலை மீள திறப்பு - வெளியானது வர்த்தமானி இலங்கை செய்தி

போகம்பறை சிறைச்சாலை மீள திறப்பு – வெளியானது வர்த்தமானி

  • July 9, 2026
  • 0 Comments

கண்டி, பழைய போகம்பறை சிறைச்சாலையை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் நிறுவியுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு வர்த்தமானி மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய போகம்பறை சிறைச்சாலை, முழுவதையும் உள்ளடக்கிய அதிகார வரம்புடன், ஒரு சிறைச்சாலையாக நிறுவப்படுவதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைக்கவும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அடுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]