இலங்கை

விமலுக்கு இடியாக வந்த தீர்ப்பு – தில்வின் சில்வாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்

ஜேவிபியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவிற்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜேவிபியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறியதற்காக ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு முன்னதாக வர்த்தக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த உத்தரவை மீள் பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி விமல் வீரவன்ச மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த  மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்  தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன் உச்சநீதிமன்றம்  வர்த்தக உயர் நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

வீரவன்சவின் “நத்த வெனுவட்ட அத்த” என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட சில உள்ளடக்கங்கள் சில்வாவின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறியுள்ளதாகக் கண்டறியப்பட்டப்பின் வீரவன்சவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்