ஈரான் கையில் உள்ள பொன்னான ஆயுதம் – அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு மறுப்பு
போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் முடங்கியுள்ள நிலையில், அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈரானிய வட்டாரங்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை பொன்னான ஆயுதமாக வர்ணிக்கின்றன. அதாவது உலகப் பொருளாதாரத்தின் மீதான அதன் சிறந்த செல்வாக்குச் செலுத்தும் கருவி என்றும் அதன் கட்டுப்பாட்டை விட்டுக் கொடுக்கப்போவதில்லை என்றும் உறுதிபூண்டுள்ளன.
போருக்கு முன்பு, சராசரியாக தினமும் 125 வர்த்தகக் கப்பல்கள் அந்த ஜலசந்தி வழியாகச் சென்றன.
பல ஆண்டுகளாக அந்த ஜலசந்தியை மூடக்கூடும் என்று ஈரான் எச்சரித்திருந்தாலும், வளைகுடா அண்டை நாடுகளையும் உலகளாவிய எரிசக்தி நுகர்வோரையும் கோபப்படுத்தும் ஒரு நடவடிக்கையால் தங்களின் சர்வதேசத் தனிமைப்படுத்தல் அதிகரித்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக, அவ்வாறு செய்ய தயக்கம் காட்டி வந்தது.
இருப்பினும் அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டு இராணுவ நடவடிக்கை மற்றும் அமெரிக்காவின் திடீர் தாக்குதல்கள் காரணமாக அந்த ஜலசந்தியை ஆயுதமாகப் பயன்படுத்த ஈரான் ஆரம்பித்துள்ளது.




