குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

வளைகுடாவிலுள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள்மீது ஈரான் தாக்குதல்

  • July 9, 2026
  • 0 Comments

குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணை அமைப்பு, கத்தாரில் உள்ள செயற்கைக்கோள் அமைப்பு (Satellite antenna early warning system) மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் ஆகியவையே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டுள்ளன. தாக்குதல்கள் தொடரும் எனவும் ஈரான் அறிவித்துள்ளது. அதேவேளை, கடந்த 48 மணிநேரத்துக்குள் […]

இலங்கை

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தாங்க முடியாத வெப்பம்

  • July 9, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி,  இன்று (09) மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்  சில இடங்களில்,  வெப்பநிலையானது  மனித உடல் உணரும் வெப்பநிலையின் அளவை விட உச்சம் தொட வாய்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே வெயிலில் நீண்ட நேரம் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, […]

ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது. உலகம் செய்தி

நேட்டோ செயலர் மற்றும் ஐரோப்பிய நாடுகள்மீது ஈரான் கடும் விசனம்

  • July 9, 2026
  • 0 Comments

ஈரான்மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் Mark Rutte தெரிவித்த கருத்துக்களை ,ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும், இப்போரில் ஐரோப்பிய நாடுகள் உடந்தையாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரில் ஐரோப்பாவின் திட்டமிட்ட உடந்தையை மார்க் ருட்டே மீண்டும் மீண்டும் ஒப்புக்கொண்டிருப்பது, இந்த கொடூரமான மற்றும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பில் அவர்கள் நடுநிலையாக செயல்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது,” என்று பகாய் […]

உலகம்

ஈரான் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது : 90 இலக்குகளை அழித்த பிறகு ட்ரம்ப் கருத்து

  • July 9, 2026
  • 0 Comments

ஈரான் உண்மையில் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் நேட்டோ உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு அமெரிக்கா செல்ல தயாரான அவர், ஏர் ஃபோர்ஸ் வன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “அவர்கள் சற்று முன்பு அழைத்தார்கள். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய மிகவும் விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார். நேற்று இரவு ஈரானில் 90-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ட்ரம்பின் […]

இலங்கை செய்தி

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இந்திய பிரஜை பலி

  • July 9, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த கைதிகளில் இந்திய பிரஜையொருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வட்டாரங்கள் ‘தி இந்து’ நாளிதழுக்கு உறுதிப்படுத்தியுள்ளன என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பலியானவர் 73 வயதுடைய உன்னிகிருஷ்ணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கை சிறைச்சாலை வரலாற்றிலேயே மிக கொடூரமான வன்முறைச் சம்பவங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் இக்கலவரத்தில், படுகாயமடைந்திருந்த மேலும் ஒரு சிறை அதிகாரி புதன்கிழமை (ஜூலை 08, 2026) உயிரிழந்ததை அடுத்து, ஒட்டுமொத்த மரணங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் […]

ஈரான்மீது தொடர்ச்சியாக இரண்டாவது இரவாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், அங்குள்ள சுமார் 90 இராணுவ இலக்குகளைத் தங்களது படைகள் தாக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானின் 90 ராணுவ இலக்குகள் அழிப்பு: அமெரிக்க ராணுவம்

  • July 9, 2026
  • 0 Comments

ஈரான்மீது தொடர்ச்சியாக இரண்டாவது இரவாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், அங்குள்ள சுமார் 90 இராணுவ இலக்குகளைத் தங்களது படைகள் தாக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. வான்வழித் தாக்குதல்களின் வீடியோ தொகுப்புடன் எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள பதிவில், “ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) வணிகக் கப்பல்கள் மற்றும் அப்பாவி சிவிலியன் மாலுமிகள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனை மேலும் முடக்குவதே” இந்தத் தாக்குதலின் நோக்கமாகும் என்று […]

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மெல்பர்ன் நகரை சென்றடைந்துள்ளார். ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

ஆஸ்திரேலியாவில் மோடிக்கு அமோக வரவேற்பு

  • July 9, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மெல்பர்ன் நகரை சென்றடைந்துள்ளார். அந்நகரிலுள்ள டாக் lands மைதானத்தில் (Docklands Stadium) இந்தியப் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. “மெல்பர்ன் மீட்ஸ் மோடி” (Melbourne Meets Modi) என்ற பெயரில் நடத்தப்படும் இந்த இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நிகழ்வில் 20,000-க்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என அமைப்பாளர்கள் கணித்துள்ளனர். அதேவேளையில், இந்தியாவில் மனித உரிமைகள் நிலை […]

செய்தி விளையாட்டு

மொராக்கோ அணிக்கு பின்னடைவு: நட்சத்திர வீரருக்கு காயம்

  • July 9, 2026
  • 0 Comments

பிரான்ஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிக்கான மொராக்கோ அணியின் திட்டங்களுக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் நட்சத்திர முன்கள வீரர் இஸ்மாயில் சைபாரி (Ismael Saibari) இந்த ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடா அணிக்கு எதிரான ‘லாஸ்ட்-16’ (சுற்று-16) சுற்று ஆட்டத்தின் போது சைபாரிக்கு தொடை தசைநார் (Hamstring) காயம் ஏற்பட்டது. இந்த முக்கிய நாக்-அவுட் போட்டிக்கு முன்னதாக அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை என்று அணியின் பயிற்சியாளர் முகமது […]

இலங்கை செய்தி

நீர்கொழும்பிலிருந்து பெண் கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்

  • July 9, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம் வெடித்ததையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 73 பெண் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல்லேகல சிறைச்சாலைக்கு 40 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலைக்கு 33 கைதிகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 28 வெளிநாட்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர். சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு, இன்று (09) கூடவுள்ளது. மேற்படி மோதல் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை விசாரித்து அறிக்கை […]

ஈரான்மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் , கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது. உலகம் செய்தி

தாக்குதல்கள் உக்கிரம் – எண்ணெய் விலை மேலும் அதிகரிப்பு

  • July 9, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் , கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, இரு முக்கிய கச்சா எண்ணெய் குறியீடுகளும் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த மட்டத்தில் நிலைபெற்றன. புதன்கிழமை வர்த்தக அமர்வின் முடிவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 5%-க்கும் மேல் உயர்ந்து $78.02 ஆக நிலைபெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த […]