செய்தி

காசா மக்களை தப்பியோடுமாறு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

  • October 8, 2023
  • 0 Comments

காசா மக்கள் அங்கிருந்து மக்களை தப்பியோடுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவின் மீதான பழிவாங்கும் தாக்குதலிற்கு முன்னதாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் காசா பள்ளத்தாக்கின் மீது தொடர்ச்சியான விமானதாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது. இதுவரை 230 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 1000 பேர் வரை காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முற்றுகைக்குள்ளாகியுள்ள காசா பள்ளதாக்கின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நகரத்தின் மத்திக்கு சென்று […]

இலங்கை

இலங்கையில் வாகன சாரதிகளிடம் பொலிஸார் விடுத்த கோரிக்கை

  • October 8, 2023
  • 0 Comments

இலங்கையில் வீதிகளில் கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த, பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். கொழும்பு – சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் பொலிஸார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். அதேநேரம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 638 வாகன […]

உலகம்

தாக்குதல் அச்சம் – உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கை

  • October 8, 2023
  • 0 Comments

உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் டெல் அவீவ் விமான விமானச் சேவைகளை நிறுத்தியுள்ளது. நகருக்கான விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. பாலஸ்தீன ஹமாஸ் கிளர்ச்சிக் குழு இஸ்ரேலில் பெரிய அளவில் தாக்குதல் நடத்திவருவதால் அவை அந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. American Airlines, Air France, Lufthansa, Emirates, Ryanair, Aegean Airlines உள்ளிட்ட நிறுவனங்கள் விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. அது குறித்த தகவல் டெல் அவீவ் Ben Gurion விமான நிலைய அறிவிப்புப் பலகையில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்தால் காத்திருக்கும் ஆபத்து

  • October 8, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் ஸ்மார்ட் போனில் உள்ள அசிஸ்டன்ட் முதல் தானாக ஓடும் கார்களில் பயன்படுத்தப்படும் அல்காரிதம் வரை நம் வாழ்வில் பயன்படுத்தும் அனைத்திலுமே அங்கமாகிவிட்டது. இதனால் பல நேர்மறை மாற்றங்கள் உலகில் நிகழும் என்றாலும், அதன் ஆபத்து குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளது. AI நீங்கள் நினைப்பதை விட பல ஆபத்துக்களை உள்ளடக்கியுள்ளது. AI தொழில்நுட்பத்தால் ஏற்படும் முக்கியமான ஆபத்துகளில் ஒன்றாக சார்பு மற்றும் பாகுபாடு பார்க்கப்படுகிறது. அதாவது இந்த தொழில்நுட்ப அமைப்புகள் தங்களுக்கு என்ன […]

ஐரோப்பா

இணையத் தாக்குதலுக்குள்ளாகிய Lyca Mobile – அறிக்கை வெளியிட்டு உறுதி செய்த நிறுவனம்

  • October 8, 2023
  • 0 Comments

சர்வதேச தொலை தொடர்பு சேவை வலையமைப்பான லைகா மொபைல் சமீபத்திய நாட்களில் இணையத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக அதன் சேவைகள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளது. இது தொடர்பில் லைகா மொபைல் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் வலையமைப்பில் ஏற்பட்ட இடையூறுகளின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, Lyca Mobile UK Limited சிஸ்டம்ஸ் சைபர் தாக்குதலுக்கு ஆளானது என்பது தெளிவாகியுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகிறோம். […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் தீவிரம் – ஜெருசலேமில் சிக்கியுள்ள தமிழர்கள்

  • October 8, 2023
  • 0 Comments

தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து பாலஸ்தீன ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்தது. இந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. இந்த போரை தொடர்ந்து, இஸ்ரேல் போர் நிலையை அறிவித்து, மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு […]

ஆசியா

சிங்கப்பூரில் 20 வயது இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • October 8, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் 20 வயது இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் 20 பிரம்படிகளும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. 18 வயதான முஹம்மது உசைர் அப்துல் ரஹ்மான் என்ற இளைஞர், குற்றத்தில் ஈடுபடும்போது முழுநேர தேசிய சேவையாளராக பணிபுரிந்துள்ளார். பாலியியல் குற்றச்சாட்டு தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் 16 வயதுக்குட்பட்ட இளையரை பாலியல் ரீதியாக பாதிக்கச் செய்த ஒரு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், பாலியல் குற்றங்கள் […]

இலங்கை

இலங்கையில் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம்

  • October 8, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கிங், களு, நில்வலா மற்றும் அத்தனகலு ஓயாவை சுற்றியுள்ள தாழ்நிலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் இன்னும் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நில்வலா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகமாக உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக மாத்தறை, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய, திஹாகொட, அதுரலிய, அக்குரஸ்ஸ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறான […]

இலங்கை

மாத்தறையில் தற்காலிக மின் தடை :இலங்கை மின்சார சபை

மாத்தறை கிரிட் துணை மின் நிலையத்தை அண்மித்த பகுதிகளில் அதிகரித்து வரும் நீர் மட்டம் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மின்சார விநியோகத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கருத்துப்படி, நிலைமை சீராகும் வரை தற்காலிக மின் தடை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாத்தறை கிரிட் துணை மின்நிலையத்தில் பணிநிறுத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதன் பணியாளர்களை வெளியேற்றுவதற்கு CEB ஏற்பாடு செய்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் இலங்கை […]

இலங்கை

மட்டக்களப்பில் சுமன ரத்ன தேரர் தலைமையில் போராட்டம் : ஜனாதிபதிக்கு எதிராக அநாகரிகமான வார்த்தை பிரயோகம்

மட்டக்களப்பு நகரில் மயிலத்தமடு பகுதியில் காணி அபகரிப்புகளை முன்னெடுத்துள்ள சிங்களவர்கள் அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஜனாதிபதிக்கு எதிராகவும் பொலிஸாருக்கு எதிராகவும் அநாகரிகமான வார்த்தை பிரயோகத்தினை பயன்படுத்தி பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் புனித மைக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி கலந்துகொண்ட போது அவரை சந்திப்பதற்கு ஊர்வலமாக சென்று பாடசாலைக்கு செல்லும் வழியில் பொலிஸார் வழிமறித்து செல்ல தடைவிதித்த நிலையில் பொலிஸாருக்கும் அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் பொலிஸாருக்கு எதிராக கடுமையான […]